துருப கோசு
துருப கோசு (Dhruba Ghosh) (1957 - 2017))[1] மும்பையைச் சேர்ந்த ஒரு இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரும் சாரங்கிக் கலைஞருமாவார். [2]
துருப கோசு | |
---|---|
பிறப்பு | 1957 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
இறப்பு | 10 சூலை 2017 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | இசைக்கலைஞர் இசை ஆசிரியர் ஆசிரியர் |
அறியப்படுவது | சாரங்கி இசை |
பெற்றோர் | நிகில் கோசு உஷா நயம்பள்ளி |
விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது |
சுயசரிதை
தொகுதுருப கோசு 1957 இல் மும்பையில் பிறந்தார். கைம்முரசு தாள வாத்தியத்தில் புகழ்பெற்ற மேதையான இவரது தந்தை பத்ம பூசண் பண்டிட் நிகில் கோசு ஒரு பிரபல இசைக்கலைஞரும், ஆசிரியரும், எழுத்தாளருமாவார். [3] துருப கோசு, பிரபல புல்லாங்குழல் கலைஞரும், இசையமைப்பாளருமான பண்டிட் பன்னலால் கோசின் மருமகன் ஆவார்.[3] அனைத்திந்திய வானொலியின் தத்தரம் பார்வதகர், உஸ்தாத் அலி அக்பர் கான், உஸ்தாத் சாகிருதீன் கான் ஆகியோரிடமிருந்து சாரங்கியின் அடிப்படைகளை இவர் கற்றுக்கொண்டார். [4]பாடகர் பண்டிட் தின்கர் கைகினியின் வழிகாட்டுதலிலும் இவர் படித்தார். இவரது சகோதரர் நயன் கோசும் கைம்முரசு இசைக்கலைஞராவார்.[5] துருப கோசு மிகோ: ஜர்னி டு த மௌண்டைன் என்ற இசைத் தொகுப்பில் பணியாற்றினார். [6] இது கிராமி விருதை வென்றது.[4][6] இவர் பல்வேறு இணைவு இசைத் தொகுப்புகளிலும் பணியாற்றினார்.[3] பண்டிட் துருப கோசு 10 சூலை 2017 அன்று இந்தியாவின் மும்பையில் காலமானார். [7]
விருதுகள்
தொகு- சங்கீத நாடக அகாதமி விருது. 2013 [2]
- பால் வின்டர் காஸ்ட், துருப கோசு உள்ளிட்ட அமெரிக்க இசைக் குழு கிராமி விருதை வென்றது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Soumya, Vajpayee Tiwari (11 July 2017). "Sarangi maestro Dhruba Ghosh dies of massive heart attack" (in en). mid-day (mid-day). https://www.mid-day.com/articles/sarangi-maestro-pandit-dhruba-ghosh-passes-away-dead-death-dies-heart-attack-mumbai-bollywood-news/18413151. பார்த்த நாள்: 5 May 2019.
- ↑ 2.0 2.1 Akademi, Sangeet Natak. "Sangeet Natak Akademi Declares Fellowships (Akademi Ratna) and Akademi Awards (Akademi Puraskar) for the Year 2013". pib.nic.in. Sangeet Natak Akademi. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.
- ↑ 3.0 3.1 3.2 Rajan, Anjana (5 December 2013). "Music, medically speaking" (in en-IN). The Hindu (The Hindu). https://www.thehindu.com/features/friday-review/music/music-medically-speaking/article5426160.ece. பார்த்த நாள்: 5 May 2019.
- ↑ 4.0 4.1 "Dhruba Ghosh [Delhi Gharana] | Artists-India Gallery". www.artists-india.com. www.artists-india.com. Archived from the original on 5 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.
- ↑ Jul 10, Bella Jaisinghani | Updated. "Dhrubajyoti Ghosh: Music world mourns the passing of sarangi player Dhrubajyoti Ghosh | Mumbai News - Times of India" (in en). The Times of India (The Times of India). https://timesofindia.indiatimes.com/city/mumbai/music-world-mourns-the-passing-of-sarangi-player-dhrubajyoti-ghosh/articleshow/59532870.cms. பார்த்த நாள்: 5 May 2019.
- ↑ 6.0 6.1 Rinkita, Gurav. "Meet Mumbai's Grammy winner". archive.mid-day.com (archive.mid-day.com) இம் மூலத்தில் இருந்து 5 மே 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190505064617/https://archive.mid-day.com/news/2011/feb/160211-Sarangi-Pandit-Dhruba-Ghosh-Miho-Grammy-Awards.htm. பார்த்த நாள்: 5 May 2019.
- ↑ 7.0 7.1 Angel, Romero. "Artist Profiles: Dhruba Ghosh | World Music Central.org". worldmusiccentral.org. worldmusiccentral.org. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.