துருவை என்பது வெண்ணிறச் செம்மறி ஆடு.

  • இது வருடை ஆடுகளோடு சேர்ந்து மேய்வதும் உண்டு.[1]
  • ஆயர் இல்லத்தில் துருவை வெள்ளையைத் தாம்புக்கயிற்றால் கட்டி வைத்திருப்பர்.[2]
  • துருவைக் குட்டிகளை நரி இரைக்காகத் தாக்க வரும். அதனைத் தடுக்க இடையன் [3] நல்லிரவில் நரி ஊளையிடும் ஓசை கேட்கும்போதெல்லாம் தன் கொம்பை ஊதி ஓட்டுவான்.[4]
துருவை-வெள்ளை

அடிக்குறிப்பு

தொகு
  1. தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ,
    கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும்
    பல் யாட்டு இனம் நிரை (மலைபடுகடாம் - அடி 414)
  2. நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்
    கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும் (பெரும்பாணாற்றுப்படை 152-153)
  3. முல்லைப் பூவையும், தோன்றிப் பூவையும் கண்ணியாகக் கட்டி அணிந்துகொண்டிருப்பவன்
  4. பானாட் கங்குல்,
    மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
    தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,
    வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
    ஐது படு கொள்ளி அங்கை காய,
    குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
    சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
    முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
    கருங் கோட்டு ஓசையொடு (அகநானூறு 94)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவை&oldid=2745880" இலிருந்து மீள்விக்கப்பட்டது