துரூக் கோட்டை, குன்னூர்
துரூக் கோட்டை என்பது 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறிய கோட்டை ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குன்னூரில் இருந்து ஏறத்தாழ 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் இதைப் பகாசுர மலை என்றும் அழைப்பதுண்டு. இன்று அழிபாடாகக் காட்சியளிக்கும் இந்தக் கோட்டையின் ஒரு சுவர் மட்டுமே எஞ்சியுள்ளது. சம தளத்தில் இருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோட்டையை மலையேற்றத்தின் மூலமே சென்றடைய முடியும். சுற்றுலா செல்பவர்கள் நான்சச் தேயிலைத் தோட்டத்தினூடாக மலை ஏறுவதன் மூலம் இவ்விடத்துக்குச் செல்வர்.
துரூக் கோட்டை | |
---|---|
அமைவிடம் | குன்னூர், நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
கட்டப்பட்டது | 16-ஆம் நூற்றாண்டு |
இந்தக் கோட்டை 16-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட திப்பு சுல்தானின் புறக்காவல் அரணாகப் பயன்பட்டது.
குறிப்புகள்
தொகுஇவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- Droog Fort பரணிடப்பட்டது 2013-11-24 at the வந்தவழி இயந்திரம் in TouristLink