துரோணாச்சாரியார் கோயில்

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ளது

துரோணாச்சாரியார் கோயில் (Dronacharya Temple) மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் ஆசிரியரான துரோணாச்சாரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே கோயிலாகும். இது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இருக்கும் குருகிராமில் உள்ள பீம் நகர் கிராமத்தில் அமைந்துள்ளது.

துரோணாச்சாரியார் கோயில்
துரோணாச்சாரியார் கோயில் is located in அரியானா
துரோணாச்சாரியார் கோயில்
அரியானா-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:அரியானா
மாவட்டம்:குருகிராம்
அமைவு:பீம்நகர், பிரிவு 6, குருகிராம்
ஆள்கூறுகள்:28°28′12″N 77°01′19″E / 28.470°N 77.022°E / 28.470; 77.022
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:சிங்க பரத்

வரலாறு மற்றும் முக்கியத்துவம் தொகு

மகாபாரதக் காவியத்தின் படி குரு துரோணாச்சாரியார் வாழ்ந்த இடம் குருகிராம் ஆகும். இவர் பாண்டவர்களுக்கும்]] கௌரவர்களுக்கும் கல்வி கற்பித்த இடமும் இதுவாகும். 1872 ஆம் ஆண்டில் துரோணரின் மனைவியான சீத்தாலா தேவியின் தீவிர பக்தரான சிங்க பாரத், என்பவர் தற்போதைய இக்கோயிலைக் கட்டினார்.[1] துரோணாச்சாரியார் தொடர்பான கட்டிடங்களுக்கு சிங்க பாரத் நிறைய நிலங்களை நன்கொடையாக வழங்கினார். காலப்போக்கில், துரோணர் கோவில் பெரிதாகி ஓர் அறையிலிருந்து இரண்டு அறைகளாக மாறியது. [2] கோயிலுக்கு அருகில் வசிக்கும் ஐந்து குடும்பங்களால் தற்போது கோயில் பராமரிக்கப்படுகிறது. பெரும்பாலும், மிகவும் பிரபலமான சீத்தலா மாதா கோயிலுக்கு வருகைதரும் பார்வையாளர்கள் துரோணாச்சார்யா கோயிலுக்கும் வருகிறார்கள்.

குருகிராமில் மகாபாரதத்துடன் தொடர்புடைய துரோணாச்சார்யார் குளீத்த இடமாகக் கருதப்படும் பீமா குந்து ஏகலைவா கோயில் மற்றும் பாண்டவர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் போன்ற முக்கிய இடங்களுக்கு அருகில் இந்த கோயில் அமைந்துள்ளது.

கட்டமைப்பு தொகு

இரண்டு அறைகளைக் கொண்ட இந்த ஆலயம் ஒரு தெருவின் மூலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. கோயிலின் நடுவில் துரோணரின் உயரமான சிலை வைக்கப்பட்டுள்ளது. துரோணர் சிலையைச் சுற்றி மற்ற இந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளன. பின்புறச் சுவரில் துரோணாச்சாரியார் தனது மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதைச் சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன.

சுற்றுலாவுக்கான சமீபத்திய முயற்சிகள் தொகு

குர்கானின் பெயர் குருகிராம் என மாற்றப்பட்டபோது பீம் நகர் கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். துரோணர் கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்த்தனர். சுற்றுலாவை அதிகரிக்க, துரோணாச்சார்யா கோயில், ஏகலைவா கோயில் மற்றும் அருகிலுள்ள பிற இடங்களை உள்ளடக்கிய உள்ளூர் சுற்றுலா சுற்றுவழி உருவாக்கப்பட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். [3]

மேற்கோள்கள் தொகு

  1. "In Gurugram's Subhash Nagar exists the only temple dedicated to Dronacharya". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-06-04. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.
  2. "Witness to over a century of change, a temple for the 'Guru' in Gurgaon". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.
  3. "Locals want tourist circuit developed for the Guru". Hindustan Times (in ஆங்கிலம்). 2016-04-15. பார்க்கப்பட்ட நாள் 2020-05-14.