துர்காபர் காயசுதா
துர்காபர் காயசுதா (Durgabar Kayastha) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காமரூபம் மண்டலம் காமக்யா பகுதியைச் சேர்ந்த ஓர் இலக்கியவாதி ஆவார். அவர் நன்கு அறியப்பட்ட மானசா கவிஞராகவும், 16 ஆம் நூற்றாண்டின் சிறப்பு மிக்க நிபுணராகவும் இருந்தார்.[1]
துர்காபர் காயசுதாDurgabar Kayastha | |
---|---|
பிறப்பு | 1515 காமாக்யா, காமரூபம் |
இறப்பு | 1560 (அகவை 44–45) |
தொழில் | கவிஞர் |
மொழி | அசாமிய மொழி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பெகூலா உபாக்யானா |
இவரது முக்கிய படைப்புகளில் ஒன்றான பெகூலா உபாக்யானா, பெகூலா மற்றும் சந்த் சதாகர் கதைகளை விவரிக்கும். பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுகவி நாராயண் மற்றும் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துர்காபர் ஆகியோரால் இந்த வசனங்கள் எழுதப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இந்தக் கதையுடன் தொடர்புடைய பாடல்வரிகள் மேற்கு காமரூப வட வங்காளத்தின் பிற பகுதிகளிலும் இருந்தன. துர்கபாரில் உள்ள பாடல்கள் துர்கபாரி என்று அழைக்கப்படுகின்றன. துர்காபர் காயசுதா மாதவ கந்தலியின் இராமாயணத்தை பாடல்களாக மாற்றி, தனது சொந்த புதிய பாடல்களை உருவாக்கினார், இவை இரண்டும் மொத்தம் ஐம்பத்தெட்டு பாடல்களைக் கொண்டிருந்தன, மேலும் இந்த பாடல்கள் வெவ்வேறு பாரம்பரிய ராகங்களுக்கு வைக்கப்பட்டன. இசைப் பாடல்கள் பாடும் பாடல் பாணியில் துர்காபர் காயசுதா இராமாயணத்தை இயற்றினார். [2]