துர்காவதி ஆறு
துர்காவதி ஆறு (Durgavati River) அல்லது துர்கௌதி என்றும் அழைக்கப்படும் ஆறானது இந்தியாவின் பீகாரில் உள்ள கைமூர் மாவட்டத்தில் கர்மனாசாவின் துணை ஆறாக ஓடுகிறது.
துர்காவதி ஆறு Durgavati River துர்காவதி ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | கைமூர், ரோத்தாசு |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | கர்மன்னாசார் ஆறு |
நீளம் | 165 Km |
அகலம் | |
⁃ average | 222 அடி |
ஆற்றோட்டம்
தொகுதுர்காவதியின் மூலாதாரம் சுமார் 11 கிலோமீட்டர்கள் (7 mi) கர்மநாசத்தின் கிழக்கே அமைந்துள்ளது. இதன் மேல் பகுதியில் 6 முதல் 9 மீட்டர்கள் (20 முதல் 30 அடி) அகலமுள்ளப் பாறைக் கால்வாய் உள்ளது. இது கிட்டத்தட்ட வடக்கே சுமார் 14 கிலோமீட்டர்கள் (9 mi) வரை செல்லக்கூடியது. இது பாறை நிலத்தின் கீழே விழும் போது காதர் கோ என்ற ஆழமான பகுதியினை உண்டாக்குகிறது. துர்க்கன் எனும் நிலப்பகுதியில் இதைப் போலவே உருவாகும் மூன்று நீரோட்டத்துடன் இணைகின்றது. இந்த மூன்று நீரோடைகள் லோகாரா, இதியாதுப் மற்றும் கோதாசு ஆகும். துர்காவதி கர்மனாசாவுடன் வலது கரையின் துணை ஆறாக இணைகிறது.[1]
அருவி
தொகுதுர்காவதி அருவி சுமார், 80 மீட்டர்கள் (260 அடி) உயரத்திலிருந்து, துர்காவதி ஆற்றில் ரோக்தாசு பீடபூமியின் விளிம்பில் விழுகின்றது.
துர்காவதி நீர்த்தேக்கம்
தொகுகரம்சத் அணை என்றும் அழைக்கப்படும் துர்காவதி நீர்த்தேக்கம் கைமூர் மாவட்டத்தில் உள்ள கரம்சத் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நீர்த் தேக்க அணையாகும். 1976ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த ஜெகசீவன்ராம் அவர்களால் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சசரம் வழியாக குத்ரா -செனாரி-மலாகிபூர் சாலை வழியாக இந்நீர்த்தேக்கத்தினை அடையலாம்.[2]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hunter, William Wilson. "The Imperial Gazetter of India (Volume 7), page 56 of 57". 4.64 Karmanasa. பார்க்கப்பட்ட நாள் 2010-06-28.
- ↑ "Meira Kumar in trouble in Sasaram". Archived from the original on 2014-08-05. பார்க்கப்பட்ட நாள் 2023-08-30.