துர்கா சரண் பானர்ச்சி
துர்கா சரண் பானர்ச்சி (Durga Charan Banerjee) (ந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1898-1952 ஆம் ஆண்டுகள் காலத்தில் இவர் வாழ்ந்தார். வங்காள மொழி பேசும் இந்திய சட்ட வல்லுநராகவும் முதல் மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுதுர்கா சரண் பானர்ச்சி அனுகுல் சரண் பானர்ச்சிக்கு 1898 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் மிட்னாபூரில் பிறந்தார். மிட்னாபூர் கல்லூரியிலும் இசுக்காட்டிசு பேராலயக் கல்லூரியிலும் படித்தார். [2] பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் குற்றவியல் சட்டம் பயின்றார். 1913 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரிகுண தேவியை மணந்தார் [1]
தொழில்
தொகுஒரு குற்றவியல் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அரசு வழக்கறிஞர்கள் குழுவில் சேர்ந்து பணியாற்றினார். 1921 ஆம் ஆண்டில் மிட்னாபூர் நகராட்சியின் நகராட்சி ஆணையராகவும் பணியாற்றினார். பின்னர் மிட்னாபூரில் உள்ள டயமண்ட் அமெச்சூர் திரையரங்கின் மேலாளராகப் பணியாற்றினார். இராமகிருசுணா அறக்கட்டளை, செபாசுரம் மற்றும் மிட்னாபூரில் உள்ள மருத்துவமனை ஆகியவற்றின் செயல்பாடுகளுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டார். [1]
1952 ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தலில் பாரதிய சனசங்கத்தின் வேட்பாளராக மிட்னாபூர்-இயார்கிராம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]