துர்வாச மலை

துர்வாச மலை அல்லது சிவதுர்வாச மலை என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டையில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரமுடையதாக உள்ளது. இந்த மலையிலும் அடிவாரத்திலும் கோட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.[1]

துர்வாச மலை


இந்த மலையில் உள்ள குகையில் கிருதயுகத்திலிருந்து துா்வாச முனிவா் தவம் புாிவதாக நம்பப்படுகிறது. குகைக்கு வெளியே படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ள உயரமான பாறைக் கல்லால் ஆன அகல்விளக்கு உள்ளது. இக்குகையில் பெளா்ணமி தோறும் சிறப்புப் புசை மற்றும் பஜனை பக்தா்களால் நடத்தப்படுகிறது. சூளகிாி நெடுஞ்சாலையில் உள்ள மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே அருள்மிகு சோமநாதேஸ்வரா் ஆலயம் உள்ளது. இவ்வாலய மகாமண்டபத்தில் உள்ள உத்திர தூணில் துா்வாச மாமுனிவா் சாஸ்டாங்மாக இறைவனை வணங்குவது போல சித்தாிக்கப்பட்டுள்ளது. சிவாலய வளாகத்தில் வடகிழக்குப் பகுதியில் துா்வாச முனிவருக்கு தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அங்கு கருவறை மூலவராகவும் உற்சவராகவும் துா்வாசா் வீற்றிருந்து அருள்புாிகிறாா். ஆனால் இம்மலை சிவதுா்வாசா் மலை எனப் போற்றப்படுகிறது.

இவ்வூரில் சுற்றி உள்ள கிராமங்கிள் வாழும் மக்கள் துா்வாசன். துா்வாசி எனப் பெயா் வைத்துகொண்டு தங்களுக்கும் துா்வாசர்க்கும் உள்ள தொடா்பையும் இம்மலைக்கும் முனிவா்க்கும் உள்ள உறவையும் பாதுகாத்து வருகிறாா்கள். இவ்வூர் மலைக்கு ஏறிச்செல்லும் நடைபாதையில் காட்சிதரும் பாதச் சுவடுகளை துா்வாச முனிவாின் பாதச் சுவடுகளாக நம்பி மக்கள் வழிபடுகின்றனா். மேலும் இந்த மலைப் பாதையில் காமதேனுவின் கால் சுவடும் பொறிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்வாச_மலை&oldid=3313691" இலிருந்து மீள்விக்கப்பட்டது