துறவற மடம் (convent) என்பது குருக்கள், மத சகோதரர்கள், மத சகோதரிகள், துறவிகள் அல்லது அருட்சகோதரிகளின் சமூகமாகும்; அல்லது கத்தோலிக்க திருச்சபை, லூதரன் தேவாலயங்கள், ஆங்கிலிக்க ஒன்றியம் ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகிற கட்டிடம் ஆகும்.[1]

ஒரு மடம்
Bursfelde Abbey AD 1579 ல் இருந்து லூதரன் துறவற மடம் ஆக இருந்து வருகிறது

சொற்பிறப்பு மற்றும் பயன்பாடு

தொகு

இந்தச் சொல்லானது இலத்தீன் 'கன்வென்டஸ்' (conventus) என்பதில் இருந்து பழைய பிரெஞ்சு மொழி மூலம் பெறப்பட்டது. இதற்கு கூட்டிணைவு அல்லது ஒன்றுசேர்தல் என்று பொருள். பயணத்திலேயே பெரும்பாலான நேரத்தை செலவழிக்கும், மதத்தை பரப்புவதற்காய் வறுமையை ஏற்றுக்கொண்டு / கையேந்தி வாழ்பவர்களின் கூட்டிணைவை குறிப்பிடவே இச்சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு "மடாலயம்" அல்லது "அருட்சகோதரிகளின் மடம்" என்பது துறவிகளின் ஒரு சமூகமாகும். அதேசமயத்தில் ஒரு "convent" என்பது வறுமையைப் பூண்டுள்ள துறவிகள் மற்றும் ஆசாரியர்களின் / மதகுருக்களின் சமூகமாகும். "abbey", “priory", "canonry", “monastery" ஆகிய சொற்கள் மடாலயங்கள் மற்றும் துறவறங்களுக்கு பயன்படுத்தப்படலாம்.

19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆங்கில பயன்பாட்டில், "கான்வென்ட்" என்ற வார்த்தை கிட்டத்தட்ட பெண்கள் வசிக்கும் கன்னியாஸ்திரிகளின் மடத்தைக்  குறிப்பதாயும்,[2] அதே சமயத்தில் "மடாலயம்" அல்லது "மடம்" என்பவை ஆண்கள் வசிக்கும் துறவற இல்லத்தைக் குறிப்பதாயும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வரலாற்றுப் பயன்பாட்டில் இவ்வார்த்தைகள் பெரும்பாலும் இடம்மாற்றி உபயோகிக்கக்கூடியவை. குறிப்பாக "convent" என்ற சொல் ஆண்களின் மடத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.

குறிப்புகள்

தொகு
  1. Evangelisti, Silvia (2008). Nuns: A History of Convent Life, 1450–1700 (in English). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 38-39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-953205-6.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Etym on line

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துறவற_மடம்&oldid=2721940" இலிருந்து மீள்விக்கப்பட்டது