துறவுமேல் அழகர் கோயில்

துறவுமேல் அழகர் கோயில் (Thuravu Mel Azhagar Temple) தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வடக்கிலமைந்துள்ள சலுப்பை கிராமத்தில் அமைந்துள்ளதொரு கோயிலாகும்.[1] இக்கோயிலில் பெண்கள் உள்ளே சென்று வழிபாடு செய்ய அனுமதி இல்லை.[2]

இருப்பிடம்

தொகு

இக்கோயில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே 6 கிலோமீட்டர் தொலைவில் சலுப்பை கிராமத்திற்கும் அதற்கு முன்பாக உள்ள சத்திரம் கிராமத்திற்கும் நடுவே அமைந்துள்ளது.[3]

மூலவர்

தொகு

மூலவருக்கு தனி சிலை கிடையாது. கிணற்றின் மேல் ஒரு படுக்கைக் கல்லைத்தான் மூலவராக மக்கள் வழி்படுகின்றனர்.

சுற்றியுள்ள கோயில்கள்

தொகு
  • வீரனர் கோயில்
  • வீரபத்திரசாமி கோயில்
  • கருப்பசாமி கோயில்

சிறப்பு

தொகு

சுதையால் செய்யப்பட்ட பெரிய குதிரை சிலைகளும் 27 அடி உயரமுள்ள யானை சிலைகளும் இக்கோயிலின் சிறப்பம்சங்களாகும்.[4]

படையல்

தொகு

மூலவர்

தொகு

மூலவருக்கு சைவ உணவு படைக்கப்படுகிறது.

சுற்றியுள்ள கோயில்கள்

தொகு

சுற்றியுள்ள கோயில்களில் கிடாவெட்டி சமைத்து படைக்கும் அசைவ உணவு படைக்கப்படுகிறது.

திருவிழா

தொகு

ஆண்டுதோறும் தைப் பொங்கல் முடிந்து வரும் கரிநாளில் விழா கொண்டாடப்படுகிறது. ஜயங்கொண்டம், செங்குந்தபுரம், இலையூர், வாரியங்காவல், மருதூர், கொடுக்கூர், பொன்பரப்பி, குவாகம், ஆண்டிமடம், உட்கோட்டை, ராதாபுரம், நரசிங்கம்பாளையம், படைநிலை, மீன்சுருட்டி, சின்னவளையம், உட்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இத்திருவிழாவில் பங்கேற்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. திருத்தலம் அறிமுகம்: அரூபமாய அருளும் அழகர் - சலுப்பை துறவுமேல் அழகர் ஆலயம், தி இந்து (தமிழ்), நாள்: நவம்பர் 12, 2015
  2. "சந்நிதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை... உக்கிரமான துறவு மேலழகர் வழிபாடு!". ஆனந்த விகடன். https://www.vikatan.com/spiritual/temples/135599-the-glory-of-saluppai-thuravu-mel-azhagar-temple#google_vignette. பார்த்த நாள்: 20 June 2024. 
  3. தினத்தந்தி (2022-04-07), "துறவுமேல் அழகர் கோவிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு", www.dailythanthi.com, பார்க்கப்பட்ட நாள் 2024-06-20
  4. "கங்கைகொண்டசோழபுரச் சலுப்பையும் சாளுக்கியரும்", groups.google.com, பார்க்கப்பட்ட நாள் 2024-06-20
"https://ta.wikipedia.org/w/index.php?title=துறவுமேல்_அழகர்_கோயில்&oldid=4015926" இலிருந்து மீள்விக்கப்பட்டது