துலியன் ஏரி

துலியன் ஏரி (Tulian Lake) இந்தியாவின் ஜம்மு மற்றும் காசுமீர் மாநிலத்திலுள்ள அனந்தநாக் மாவட்டத்தில் பகல்காம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும் [1]. ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகின்ற இது கடல் மட்டத்திலிருந்து 3,684 மீட்டர் (12,087 அடி) உயரத்தில் உள்ளது [2]. ஏரி அமைந்துள்ளது. பகல்காமிற்கு தென்மேற்கில் 16 கிலோமீட்டர் தொலைவிலும், பாய்சரனிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஏரி அமைந்துள்ளது. பெரும்பாலும் ஏரியில் பனிக்கட்டிகள் மிதந்து கொண்டிருக்கும். 4,800 மீட்டர் (15,700 அடி) உயரமுள்ள மலைகள் ஏரியின் மூன்று பக்கங்களிலும் சூழ்ந்துள்ளன. இம்மலைகள் வழக்கமாக பனிப்போர்வையால் மூடப்பட்டுள்ளன [3]. புல்வெளிகள் நிரம்பிய பைன் மரக் காடுகளுக்கிடையில் ஏரி அமைந்துள்ளது[4].

துலியன் ஏரி Tulian Lake
துலியன்
அமைவிடம்காசுமீர் பள்ளத்தாக்கு, பகல்காம்
ஆள்கூறுகள்33°35′N 75°14′E / 33.59°N 75.23°E / 33.59; 75.23
வகைநன்னீர்
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்0.35 கிலோமீட்டர்கள் (0.22 mi)
அதிகபட்ச அகலம்0.16 கிலோமீட்டர்கள் (0.099 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்3,684 மீட்டர்கள் (12,087 அடி)
உறைவுநவம்பர் முதல் பிப்ரவரி வரை
குடியேற்றங்கள்இல்லை
துலியன் ஏரி

பிர் பாஞ்சல் மலைத்தொடர் மற்றும் சான்சுகர் ஆகிய இரு இமயமலை மலைத் தொடர்களுக்கும் இடையே ஏரி காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Romancing India: Newly weds spoilt for honeymoon destination choices". economictimes.com. http://economictimes.indiatimes.com/features/et-travel/romancing-india-newly-weds-spolit-for-honeymoon-destination-choices/articleshow/15415177.cms. பார்த்த நாள்: 9 August 2012. 
  2. "Pahalgam". indianmirror.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2012.
  3. Dewan, Parvez (1996). Jammu Kashmir Ladakh. Manohar Publishers. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170490999.
  4. "Green Kashmir". Green Kashmir. Archived from the original on 2 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துலியன்_ஏரி&oldid=3558850" இலிருந்து மீள்விக்கப்பட்டது