அனந்தநாக் (Anantnag) (əˈnæntˌnæg/nɑːg) காஷ்மீர மொழியில் அனந்தநாக் என்பதற்கு நீரூற்றுகள் மற்றும் ஏரிகளின் உறைவிடம் எனப்பொருள். அனந்தநாக், இந்தியாவின், தெற்கு காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். அனந்தநாக் நகராட்சி மன்றம் இந்நகரை நிர்வகித்து வருகிறது. மக்களில் பெரும்பாலனவர்கள் இசுலாமியர்கள். அமர்நாத் கோயிலுக்கு செல்பவர்கள் அனந்தநாக் வழியாக செல்வது எளிது.

அனந்தநாக்
اننتناگ / अनंतनाग
நகரம்
கடுகு வயல்கள், அனந்தநாக்
கடுகு வயல்கள், அனந்தநாக்
நாடு இந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்அனந்தநாக்
பரப்பளவு
 • மொத்தம்2,917 km2 (1,126 sq mi)
ஏற்றம்1,601 m (5,253 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,78,692
 • அடர்த்தி370/km2 (960/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்காஷ்மீரி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்192101192101
தொலைபேசி குறியீட்டெண்01932
வாகனப் பதிவுJK 03
பாலின விகிதம்1000 /927
எழுத்தறிவு62.69%
இணையதளம்anantnag.nic.in

அமைவிடம் தொகு

அனந்தநாக் கடல் மட்டத்திலிருந்து 5300 அடி உயரத்தில் உள்ளது.[1]. ஸ்ரீநகரிலிருந்து 53 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜம்முவிற்கு வடக்கே 204 கிமீ தொலைவிலும் உள்ளது.

அமர்நாத் கோயில் அடிவார நகரமான பகல்கம் அனந்தநாக்கிலிருந்து 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் தொகு

மார்த்தாண்ட சூரியன் கோயில் தொகு

 
சுல்தான் சிக்கந்தரால் தரைமட்டம் ஆக்கப்பட்ட மார்த்தாண்ட சூரியன் கோயிலின் புகைப்படம். எடுத்தவர் ஜான் பர்க்ஸ், ஆண்டு 1868

இந்தியத் தொல்லியற் களங்களில் அனந்தநாக் மார்தாண்ட சூரியன் கோயில் முக்கியமானது. இச்சூரியன் கோயில் கி. பி., 650-இல் காஷ்மீர கார்கோட மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் சுல்தான் சிக்கந்தர் புட்ஷிகான் என்பவர் இச்சூரியன் கோயில் முழுவதுமாக தகர்க்க ஒரு வருட காலம் ஆயிற்று.[3] இம்மார்த்தாண்டன் சூரியன் கோயில் இடுபாடுகளுக்கிடையே தற்போதும் காட்சியளிக்கிறது.இந்திய விடுதலைக்குப்பின் பழமையான இச்சூரிய கோயிலை இந்தியத் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது, [4]

மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அனந்தநாக் நகர மக்கட்தொகை 1,10,000 ஆக உள்ளது. அனந்தநாக் மாவட்டத்தின் மக்கட்தொகை 11,70,144ஆக உள்ளது.[5]. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 937 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. எழுத்தறிவு விகிதம் 66% ஆக உள்ளது. இது தேசிய எழுத்தறிவு விகிதமான 64.3%ஐ விட அதிகம்.

பொருளாதாரம் தொகு

அனந்தநாக்கில் ஆப்பிள், கடுகு, பாசுமதி அரிசி மற்றும் கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. அனந்தநாக் கம்பளி சால்வைகளுக்குப் பெயர் பெற்றது. காஷ்மீர் சமவெளியில் அனந்தநாக் ஒரு பொருளாதார மையமாக உள்ளது.[6] சுற்றுலாத் துறையின் மூலம் அதிகம் வருவாய் பெரும் நகரங்களில் அனந்தநாக்கும் ஒன்று.

இருப்புப் பாதை தொகு

ஸ்ரீநகரை அனந்தநாக் நகரத்துடன் ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை இணைக்கிறது.

தட்பவெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், அனந்தநாக் (1971–1986)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 7.0
(44.6)
8.2
(46.8)
14.1
(57.4)
20.5
(68.9)
24.5
(76.1)
29.6
(85.3)
30.1
(86.2)
29.6
(85.3)
27.4
(81.3)
22.4
(72.3)
15.1
(59.2)
8.2
(46.8)
19.7
(67.5)
தாழ் சராசரி °C (°F) −2.0
(28.4)
−0.7
(30.7)
3.4
(38.1)
7.9
(46.2)
10.8
(51.4)
14.9
(58.8)
18.1
(64.6)
17.5
(63.5)
12.1
(53.8)
5.8
(42.4)
0.9
(33.6)
−1.5
(29.3)
7.3
(45.1)
பொழிவு mm (inches) 48
(1.89)
68
(2.68)
121
(4.76)
85
(3.35)
68
(2.68)
39
(1.54)
62
(2.44)
76
(2.99)
28
(1.1)
33
(1.3)
28
(1.1)
54
(2.13)
710
(27.95)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 6.6 7.3 10.2 8.8 8.1 5.7 7.9 6.8 3.5 2.8 2.8 5.1 75.6
ஆதாரம்: HKO[7]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தநாக்&oldid=3574778" இருந்து மீள்விக்கப்பட்டது