சேஷ்நாக் ஏரி
சேஷ்நாக் ஏரி (Sheshnag Lake) (சமசுகிருதம்: शेषनाग झील) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் அமைந்த நன்னீர் ஏரியாகும்.[1] இந்த ஏரி இமயமலையின் அடிவார நகரமான பகல்காமிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமர்நாத் செல்லும் வழியில் இமயமலையில் 3,590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சேஷ்நாக் ஏரி 1.1 கிலோ மீட்டர் நீளம், 0.07 கிலோ மீட்டர் அகலம் கொண்டது.
சேஷ்நாக் ஏரி | |
---|---|
அமைவிடம் | அனந்தநாக் மாவட்டம், காஷ்மீர் சமவெளி, இந்தியா |
ஆள்கூறுகள் | 34°05′37″N 75°29′48″E / 34.093697°N 75.496686°E |
வகை | பனிமலை ஏரி |
முதன்மை வரத்து | பனி உருகுதல் |
முதன்மை வெளியேற்றம் | லித்தர் ஆறு |
அதிகபட்ச நீளம் | 1.1 கிலோமீட்டர்கள் (0.68 mi) |
அதிகபட்ச அகலம் | 0.7 கிலோமீட்டர்கள் (0.43 mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 3,590 மீட்டர்கள் (11,780 அடி) |
உறைவு | டிசம்பர் முதல் மார்ச் முடிய |
புராண வரலாறு, புவியியல்
தொகுஇந்து சமய புராணங்களின் படி, சேஷ்நாக் எனில் பாம்புகளின் அரசனான ஆதிசேஷன்[2][3] இந்த ஏரியில் உறைந்து வாழ்பவர் என இந்துக்களின் தொன்மை நம்பிக்கை ஆகும்.[4] சேஷ்நாக் ஏரி இந்துக்களின் தொன்மையான புனித யாத்திரை தலங்களில் ஒன்றான அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
சேஷ்நாக் ஏரி பல வகையான மீன் இனங்களை கொண்டது.[5][6] குளிர்காலத்தில் கடும் பனிப் பொழிவினால் இந்த ஏரி பனியால் உறைந்து விடுகிறது.[7] கோடைகாலத்தில் இவ்வேரியின் பனிகட்டிகள் உருகி பகல்காம் நகரத்தில் லித்தர் ஆறாக பாய்கிறது.
போக்குவரத்து
தொகுசேஷ்நாக் ஏரி காஷ்மீரிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும், அனந்தநாக் நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும், அமர்நாத் செல்லும் இமயமலையின் அடிவார நகரமான பகல்கம் நகரத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும், பஞ்சதரணிக்கு தெற்கே 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[8] பகல்காம் நகரத்திலிருந்து அமர்நாத் அடிவாரப் பகுதியான சந்தன்வாரி எனுமிடதிற்கு சிற்றுந்துகள் மூலம் அடைந்து, பின் சந்தன்வாரியிலிருந்து ஏழு கிலோ தொலைவில் உள்ள சேஷ்நாக் ஏரியை குதிரைகள் அல்லது பல்லக்குகள் மூலம் அடையலாம். அமர்நாத் குகைக் கோயில் சேஷ்நாக் ஏரியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சூன் மாதம் முதல் செப்டம்பர் முடிய சேஷ்நாக் ஏரியை பார்க்க நல்ல காலம் ஆகும். டிசம்பர் முதல் மார்ச்சு மாதம் வரை ஏரி பனிகட்டியால் உறைந்து விடும்.
படக்காட்சியகம்
தொகு-
சேஷ்நாக் ஏரி
-
சேஷ்நாக் ஏரி
-
சேஷ்நாக் ஏரி
மேற்கோள்கள்
தொகு- ↑ Raina, HS; KK Vass (May–June 2006). "Some biological features of a freshwater fairy shrimp, Branchinecta schantzi, Mackin, 1952 in the Northwestern Himalayas, India". J. Indian Inst. Sci. 86: 287–291. http://journal.library.iisc.ernet.in/vol200603/paper9/287.pdf. பார்த்த நாள்: 23 April 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Indian Mythology; Hindu Myrhology: Sheshnag". webonautics.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-23.
- ↑ "Sheshnag Lake". yahoo.com. Archived from the original on 2014-06-19. பார்க்கப்பட்ட நாள் 2012-04-23.
- ↑ "Bhag-P 5.25.1". Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-02-25.
- ↑ "Fishes and Fisheries in high altitude lakes, Vishansar, Gadsar, Gangabal, Krishansar". Fao.org. பார்க்கப்பட்ட நாள் 1999.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Petr, ed. by T. (1999). Fish and fisheries at higher altitudes : Asia. Rome: FAO. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-5-104309-4.
{{cite book}}
:|first=
has generic name (help) - ↑ "Pahalgam Sheshnag". cambaytours.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-23.
- ↑ "Travel to Sheshnag lake". travelomy.com. Archived from the original on 2013-01-16. பார்க்கப்பட்ட நாள் 2012-04-23.
வெளி இணைப்புகள்
தொகுவெளி ஒளிதங்கள் | |
---|---|
Amarnath yatra Sheshnag lake on Youtube | |
[1] |