பஞ்சதரணி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு சமவெளி
பஞ்சதரணி (Panchtarni) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாவட்டத்தில், இமயமலையில் அமர்நாத் குகைக்கு செல்லும் வழியில் அமைந்த சமவெளியாகும். அமர்நாத் யாத்திரைச் செல்லும் பக்தர்கள் இறுதியாக சேஷ்நாக்கில் அமைந்த முகாமில் தங்கிச் செல்வர். பஞ்சதரணியிலிருந்து 6 கிமீ தொலைவில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. [1]
பஞ்சதரணி
பஞ்சதரணி முகாம் பஞ்சதரணி ஆறு பஞ்சதரணி பள்ளத்தாக்கு | |
---|---|
ஆற்றுச் சமவெளி மற்றும் மலை முகாம் | |
ஆள்கூறுகள்: 34°11′21″N 75°29′53″E / 34.189285°N 75.4981834°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
ஏற்றம் | 3,505 m (11,500 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | உருது |
• உள்ளூர் மொழி | காஷ்மீரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 192126 |
அமைவிடம்
தொகுஇமயமலையில் 11500 அடி உயரத்தில் அமைந்த பஞ்சதரணி, அமர்நாத் குகையின் அடிவாரப் பகுதியான பகல்காம் எனும் சிற்றூரிலிருந்து 40 கிமீ தொலைவிலும், சேஷ்நாக் ஏரிக்கு வடக்கே 15 கிமீ தொலைவிலும் உள்ளது. பஞ்சதரணியைச் சுற்றிய பனிச் சிகரங்களிலிருந்து பஞ்சதரணி ஆறு உற்பத்தியாகிறது. [2][3][4][5]
தட்பவெப்பம்
தொகுபஞ்சதரணி இமயமலையில் 11,500 அடி உயரத்தில் உள்ளதால், இப்பகுதி நீண்ட குளிர்காலமும், குறைந்த வெப்பம் கொண்ட குறுகிய கோடைக்காலமும் கொண்டது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ amarnath yatra heli service, HimalayanHeli.com.
- ↑ Panchtarni of Amrnath yatra, Live India.
- ↑ Brajesh Kumar, 2003, [ "Pilgrimage Centres of India"], Diamond Books, pp.81, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8171821855.
- ↑ Dr. Shiv Sharma, 2008, "India - A Travel Guide", Fusion Books, pp.210, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8128400673
- ↑ "Panchtarni overview", Holidify.com.