பால்தால்
பால்தால் (Baltal), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கில், காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சோன்மார்க் நகரத்திற்கு வடக்கே 15 கிமீ தொலைவில் அமைந்த அமர்நாத் மலைக் கோயிலின் அடிவார கிராமம் ஆகும். பால்தால் கடல்மட்டத்திலிருந்து 2,743 மீட்டர் உயரத்தில் உள்ளது. அமர்நாத் யாத்திரையின் போது, சோன்மார்க் வழியாக செல்லும் யாத்திரீகர்கள் பால்தால் முகாமில் தங்கி, 14 கிமீ தொலைவில் உள்ள அமர்நாத் மலைக் குகைக்குச் செல்வர்.[1]பால்தால் முகாமில் பக்தர்கள் தங்குவதற்கு, ஜம்மு காஷ்மீர் அரசு ஆண்டுதோறும் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறது. [1]
அமைவிடம்
தொகுபால்டால் முகாம் சோன்மார்க் நகரத்திற்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலும், சிறிநகருக்கு வடகிழக்கே 94 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜம்முவிற்கு வடக்கே 178 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சிறப்பு
தொகுபால்டால் வழியாக அமர்நாத் மலைக்கோயிலுக்கு ஒரே நாளில் சென்று திரும்பலாம். இம்மலைப்பகுதி கடுமையான மலையேற்றங்கள் கொண்டிருப்பதால், பால்டால் - அமர்நாத் மலைப்பகுதியில் பயணம் செய்பவர்களின் உடல் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். ஆனால் அனந்தநாக் மாவட்டத்தின் பகல்கம் வழியாக குதிரையில் அமர்நாத் சென்று வர இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும்.
பாடல்டாலிருந்து, அமர்நாத் கோயிலுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சதரணி வரை ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது.
அமர்நாத் யாத்திரிகளுக்கு பாதுகாப்பு வழங்க ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய சேமக் காவல் படைகள், எல்லைப் பாதுகாப்புப் படை போன்ற துணை இராணுவப்படைகள் உள்ளது.
பால்தாலில் தொடங்கி, லடாக் பகுதியின் கார்கில் மாவட்டத்தின் திராஸ் நகரத்தில் முடியும், 14.2 கிலோ மீட்டர் நீளமுள்ள சோஜி லா சுரங்கச்சாலைப் பணி சூன், 2020-இல் தொடங்கப்பட்டுள்ளது.