சோன்மார்க்
சோன்மார்க் (Sonmarg), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காந்தர்பல் மாவட்டத்தில் அமைந்த மலை வாழிடமாகும். இதனை தங்கப் புல்வெளி என்றும் அழைப்பர் ("Meadow of Gold")
சோன்மார்க்
தங்கப் புல்வெளி | |
---|---|
மலை வாழிடம் | |
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோன்மார்க்கின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°20′N 75°20′E / 34.33°N 75.33°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | காந்தர்பல் |
ஏற்றம் | 2,800 m (9,200 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,051 |
Languages | |
• அலுவல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 191202 |
Telephone code | +91-1942417- |
வாகனப் பதிவு | JK16 |
புவியியல்
தொகுசோன்மார்க்கிலிருந்து இமயமலையின் 5000 மீட்டர் உயரமுடைய கோல்காய், அமர்நாத், மற்றும் மச்சோய் பனி கொடுமுடிகளை காணலாம்.
ஜீலம் ஆற்றின் துணை ஆறான நல்லா சிந்து ஆற்றின் கரையில் உள்ள சோன்மார்க் ஊசியிலைக் காடுகளைக் கொண்டது. மாநிலத் தலைநகரான ஸ்ரீநகருக்கு வடகிழக்கே இமயமலையில் 87 கிமீ தொலைவில் உள்ளது. இது சிறந்த கோடைக்கால சுற்றுலாத் தலமாகும்.[1]அறுபது மைல் நீளங்கொண்ட சோன்மார்க் சமவெளி பசுமையான புல்வெளிகள் கொண்டது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு122 குடியிருப்புகளைக் கொண்ட சோன்மார்க் ஊரின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 1,051 ஆகும். அதில் ஆண்கள் 579 ஆகவும்; பெண்கள் 472 ஆகவும் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 53.40 % ஆகவுள்ளது.[2]இதன் மக்கள்தொகையில் 95% மேலாக இசுலாமியர்கள் உள்ளனர்.
சுற்றுலா
தொகுஅழகிய புல்வெளிகளைக் கொண்ட சோன்மார்க்கின் அழகைக் காணச் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஏப்ரல் மாத இறுதியில், சோன்மார்க் செல்வதற்கான சாலை திறந்து விடப்படுகிறது.
சோன்மார்க்கிலிருந்து 15 கிமீ தொலைவில் பால்தால் எனும் அமர்நாத் கோயிலின் அடிவார முகாம் உள்ளது.[3] [4]
போக்குவரத்து
தொகுஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகரம் ஸ்ரீநகரிலிருந்து 87 கிமீ தொலைவில் உள்ள சோன்மார்க்கை, தேசிய நெடுஞ்சாலை 1 டி வழியாக மூன்று மணி பயண நேரத்தில் அடையலாம். [5]
தட்பவெப்பம்
தொகுசோன்மார்க் ஊரின் சராசரி வெப்பம் 6.5 °C ஆகும். ஆண்டு சராசரி மழைப்பொழிவு 932 மிமீ ஆகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், சோன்மார்க் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | -5.4 (22.3) |
-3.4 (25.9) |
1.7 (35.1) |
9.3 (48.7) |
17 (63) |
21.7 (71.1) |
24.3 (75.7) |
24.1 (75.4) |
21 (70) |
15 (59) |
7.5 (45.5) |
-0.5 (31.1) |
11.03 (51.85) |
தினசரி சராசரி °C (°F) | -8.4 (16.9) |
-7 (19) |
-1.5 (29.3) |
5.6 (42.1) |
11.8 (53.2) |
16.1 (61) |
19.1 (66.4) |
19 (66) |
15.3 (59.5) |
9.1 (48.4) |
2.5 (36.5) |
-4 (25) |
6.47 (43.64) |
தாழ் சராசரி °C (°F) | -11.3 (11.7) |
-10.5 (13.1) |
-4.6 (23.7) |
2 (36) |
6.7 (44.1) |
10.5 (50.9) |
14 (57) |
13.9 (57) |
9.6 (49.3) |
3.3 (37.9) |
-2.4 (27.7) |
-7.5 (18.5) |
1.98 (35.56) |
பொழிவு mm (inches) | 95 (3.74) |
98 (3.86) |
137 (5.39) |
139 (5.47) |
115 (4.53) |
50 (1.97) |
54 (2.13) |
68 (2.68) |
68 (2.68) |
42 (1.65) |
26 (1.02) |
40 (1.57) |
932 (36.69) |
ஆதாரம்: Climate Dat[1] |
படக்காட்சிகள்
தொகு-
தங்கப் புல்வெளி எனப்படும் சோன்மார்க் சமவெளி
-
சிர்பால் சோன்மார்க்
-
நீல்கிரார் சோன்மார்க்கில் நல்லா சிந்து
-
சோன்மார்க் தாஜிவாஸ் பனிமலை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sonmarg from Srinagar". kashmironline.net. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.
- ↑ Sonamarg Population - Ganderbal, Jammu and Kashmir
- ↑ "Sonmarg Development Authority". jktourism.org. Archived from the original on 2012-05-04. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.
- ↑ "International Rafting Championship at Sonmarg". groundreport.com. Archived from the original on 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.
- ↑ "2 SDA staff among 9 rescued from Sonmarg". hindustantimes.com. Archived from the original on 2013-06-17. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- ↑ https://en.climate-data.org/location/964583/
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: சோன்மார்க்