சோஜி லா சுரங்கச்சாலை

சோஜி லா சுரங்கச்சாலை (Zoji La Tunnel) இந்தியாவின் இமயமலையில் உள்ள ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோன்மார்க் நகரத்தையும், லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் கார்கில் மாவட்டத்தில் உள்ள திராஸ் நகரத்தையும் இணைக்கும் 14.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுரங்கச்சாலைத் திட்டம் ஆகும்.[1] சோஜி லா சுரகச்சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏலம் சூன் 2020-இல் கோரப்பட்டுள்ளது.[2] குளிர்காலத்தில் ஏழுமாதங்கள், சிறிநகர் - லே நெடுஞ்சாலை பனியால் மூடப்பட்டு போக்குவரத்து அடிக்கடி தடைபடுவதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இராணுவப் படைகளின் நடமாட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் சிறீநகர் - லே நெடுஞ்சாலையில் தடையின்றி போக்குவரத்து நடைபெறும் வகையில், சோஜி லா சுரங்கச்சாலையை அமைக்க, ஸோஜி லா கணவாய்யை குடைந்து இருவழிச் சாலைச் சுரங்கசாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறிநகர் - லே நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா), புதிதாக அமையவிருக்கும் சோஜி லா சுரங்கச்சாலை வழியாக செல்வதால் பயண நேரம் 3 மணி நேரத்திலிருந்து, 15 நிமிடமாகக் குறைக்கப்படும்.

சோஜி லா சுரங்கச்சாலை
மேலோட்டம்
தற்போதைய நிலைகட்டுமானம் நடைபெறுகிறது
வழித்தடம்பால்தால் - திராஸ்
செய்பணி
பணி ஆரம்பம்2020
Trafficதானியங்கி
தொழினுட்பத் தகவல்கள்
நீளம்14.2 கிமீ
தண்டவாளங்களின் எண்ணிக்கை4 (இரு வழிப்பாதை)
உயர் புள்ளை3,528 m (11,575 அடி)

ஸோஜி லா கணவாய், சிறிநகர் - கார்கில் செல்லும் வழியில் இமயமலையில் 3,528 மீட்டர் (11,578 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

சிறப்பம்சங்கள் தொகு

  • ஐந்தாண்டுகளில் முடிக்கத் திட்டமிட்ட 14.2 கிலோமீட்டர் நீளம் கொண்ட சோஜி லா இருவழிச் சுரங்கச்சாலை திட்டம் நிறைவேற்றிய பின்னர் இது ஆசியாவின் நீளமான சுரங்கச்சாலையாக இருக்கும். குளிர்காலகளில் சோஜி லா கணவாய் பகுதியில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக காணப்படும்.
  • இச்சுரங்கச்சாலை திட்டத்தின் மேற்கு பகுதியில் காஷ்மீரின் சோன்மார்க் நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள பால்தால் கிராமம் 3,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இச்சுரகச்சாலை திட்டத்தின் கிழக்குப் பகுதியில் லடாக் பிரதேசத்தின் கார்கில் மாவட்டத்தின் திராஸ் கிராமத்தில் அமைந்துள்ளது.
  • சோஜி லா சுரங்கச் சாலையின் நிலம் உள்ளிட்டம் மொத்த திட்டமதிப்பீடு ரூபாய் 68 பில்லியன் ஆகும்[3] .[4]
  • சோஜி லா இருவழிச் சுரங்கச்சாலை திட்டம் நிறைவேற்றிய பின், சிறிநகரிலிருந்து லே நகரம் வரை ஆண்டு முழுவதும் தடையின்றி போக்குவரத்து நடைபெறும்.

இதனையும் காணக் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோஜி_லா_சுரங்கச்சாலை&oldid=2992392" இருந்து மீள்விக்கப்பட்டது