செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை
செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை, சாலை வழிப் போக்குவரத்திற்கு பயன்படும் இதனை பத்னிடாப் சுரங்கச்சாலை என்றும் அழைக்கப்படும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு – ஸ்ரீநகர் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 44-இல் இச்சுரங்கச் சாலை, செனானி மற்றும் நஷ்ரி இடையே அமைந்த மலைப்பகுதியை குடைந்து 9.28 கிலோ மீட்டர் நீளத்திற்கு மலையைக் குடைந்து சாலை அமைக்கப்பட்டது. இச்சுரங்கச்சாலை அமைக்கும் பணி 2011-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு, 2 ஏப்ரல் 2017 அன்று நிறைவுற்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. 2019-இல் இதன் பெயர் டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கச்சாலை எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4]
![]() இரவில் சுரங்கச் சாலை | |
மேலோட்டம் | |
---|---|
வேறு பெயர்(கள்) | பத்னிடாப் சுரங்கச்சாலை |
அமைவிடம் | ஜம்மு காஷ்மீர், இந்தியா |
தற்போதைய நிலை | திறப்பு விழா 2 ஏப்ரல் 2017 |
வழித்தடம் | தேசிய நெடுஞ்சாலை 44 |
தொடக்கம் | செனானி |
முடிவு | நஷ்ரி |
செய்பணி | |
பணி ஆரம்பம் | 23 மே 2011 [1] |
உரிமையாளர் | இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் |
Traffic | தானியங்கி |
Character | பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து |
தொழினுட்பத் தகவல்கள் | |
வடிவமைப்புப் பொறியாளர் | உட்கட்டமைப்பு & நிதிச் சேவைகள் நிறுவனம் |
நீளம் | 9.2 கிலோ மீட்டர் [2] |
தண்டவாளங்களின் எண்ணிக்கை | 2[2] |
தொழிற்படும் வேகம் | மணிக்கு 50 கிலோ மீட்டர்[3] |
இச்சுரங்கச் சாலை அமைத்த பின்னர், ஜம்மு –காஷ்மீருக்கு இடையே பயண நேரம் 2 மணி நேரம் அளவுக்கும், பயண தூரம் 30.11 கி மீ அளவிற்கும் குறைந்துள்ளது. மேலும் கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாத வகையில் இச்சுரங்கசாலை கட்டப்பட்டுள்ளது.
9.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இச்சுரங்கச்சாலை இந்தியாவின் நீளமான சுரங்கச் சாலையாகும்.[3]
2520 கோடி ரூபாய் செலவில் திட்டமிட்ட இச்சுரங்கச்சாலைப் பணி, திட்டம் முடிவுறும் போது 3720 கோடி ரூபாய் செலவானது.[1][3] இச்சுரங்கச் சாலையின் முக்கிய வயிற்றுப் பகுதி 13 மீட்டர் சுற்றளவும்; வாய் பகுதியும்; வெளி பகுதியும் 6 மீட்டர் சுற்றளவும் கொண்டது. இச்சுரங்கச் சாலையில் ஒவ்வொரு 300 மீட்டர் தொலைவிற்கு ஒரு குறுக்கு வழிப் பாதை வீதம் 29 குறுக்குப் பாதைகள் கொண்டது.[3] அவசர உதவிக்கு சுரங்கச்சாலையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
அமைவிடம்
தொகுஉதம்பூர் மாவட்டத்தில் உள்ள இச்சுரங்கச் சாலை, கீழ் இமயமலைத் தொடரில் 1,200 மீட்டர் உயரத்தில் உள்ள பத்னிடாப் நகரத்தின் தெற்கில் உள்ள செனானி எனும் ஊரில் துவங்கி, பத்னிடாப் நகரத்தின் வடக்கில் உள்ள நஷ்ரி எனும் கிராமத்தில் முடிகிறது.[3]
பிப்ரவரி 2017-இல் இச்சுரங்கச் சாலை போக்குவரத்திற்கு ஏற்றது எனச் சான்று பெறப்பட்டது.[5] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2 ஏப்ரல் 2017 அன்று செனானி-நஸ்ரி சுரங்கச் சாலையைத் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.[6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "PM to inaugurate Chenani Nashri tunnel, read the facts". Archived from the original on மார்ச் 20, 2017. Retrieved Mar 19, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "IL&FS Transportation Networks Ltd - Chenani-Nashri Tunnel Project Page". Retrieved Mar 24, 2017.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "PM Narendra Modi to inaugurate India's longest tunnel: 10 facts about the 'engineering marvel'". Hindustan Times (in ஆங்கிலம்). 27 March 2017. Retrieved 27 March 2017.
- ↑ J&K's Chenani-Nashri Tunnel to be Renamed After Bhartiya Jansangh Founder SP Mukherjee
- ↑ "Nashri tunnel set to open". Archived from the original on மார்ச் 5, 2017. Retrieved Mar 4, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.hindustantimes.com/india-news/modi-to-inaugurate-india-s-longest-tunnel-10-facts-about-the-engineering-marvel/story-YwLJXwkDDVtc79oJEgvYmO.html
மேலும் படிக்க
தொகு- M. Palomba; G. Russo; F. Amadini; G. Carrieri; A.R. Jain. "Chenani-Nashri Tunnel, the longest road tunnel in India: a challenging case for design-optimization during construction" (in en-gb). World Tunnel Congress 2013 Geneva. http://www.webalice.it/giordandue/chenani%20mpl.pdf.