பத்னிடாப்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தில் அமைந்த மலைவாழிடம்
பட்னிடாப் அல்லது பத்னிடாப் (Patnitop or Patni Top) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தில் அமைந்த மலைவாழிடமாகும். இவ்வூர் இமயமலையின் சிவாலிக் மலையில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை எண் 44-இன் மீது, கடல்மட்டத்திலிருந்து 2024 மீட்டர் உயரத்தில் உள்ளது.
பட்னிடாப் | |
---|---|
மலை வாழிடம் | |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பத்னிடாப் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 33°5′25″N 75°19′35″E / 33.09028°N 75.32639°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | உதம்பூர் |
ஏற்றம் | 2,024 m (6,640 ft) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 182142 |
இணையதளம் | patnitop |
பட்னிடாப், ஜம்முக்கு வடக்கே - உதம்பூர் வழியாக ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 112 கிமீ தொலைவில் உள்ளது. பட்னிடாப் நகரத்திற்க் அருகே செனாப் ஆறு பாய்கிறது.[1]
செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை
தொகுசிவாலிக் மலையில் 1,200 மீட்டர் உயரத்தில் உள்ள பத்னிடாப் நகரத்தின் தெற்கில் 2 கிமீ தொலைவில் உள்ள செனானி எனும் ஊரில் துவங்கும் 9.2 கிமீ நீளமுள்ள செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை, பத்னிடாப் நகரத்தின் வடக்கில் உள்ள நஷ்ரி எனும் கிராமத்தில் முடிகிறது.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Silas, Sandeep (2005). "17. Patnitop". Discover India by Rail. Sterling Publishers. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-207-2939-0.
- ↑ "Chenani Nashri Tunnel Completes 2 km Excavation". ConstructionWeekOnline.in.
{{cite web}}
: CS1 maint: url-status (link)