உதம்பூர் (Udhampur), இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின், உதம்பூர் மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகர் மன்றம் ஆகும். இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். சம்மு காஷ்மீர் முன்னாள் மன்னர் இராஜா உத்தம் சிங் பெயரால் இந்நகரம் அமைந்துள்ளது. சம்மு காஷ்மீரின் மாநிலத்தின் நான்காவது பெரிய நகராகும். இந்திய இராணுவத்தின் தரைப்படை மற்றும் விமானப்படையின் வடக்கு கட்டளை அலுவலகத்தின் தலைமையகம் உதம்பூரில் அமைந்துள்ளது.

உதம்பூர்
उधमपुर
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்உதம்பூர் மாவட்டம்
தோற்றுவித்தவர்இராஜா உத்தம் சிங்
பெயர்ச்சூட்டுஇராஜா உத்தம் சிங்
அரசு
 • நிர்வாகம்உதம்பூர் நகர் மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்39 km2 (15 sq mi)
ஏற்றம்
755 m (2,477 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்35,507
 • தரவரிசை4
 • அடர்த்தி4,686/km2 (12,140/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, டோக்கிரி, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
182101
தொலைபேசி குறியீட்டெண்199

நிலவியல்

தொகு

ஜம்மு மண்டலத்தின், இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், 2480 அடி உயரத்தில் உதம்பூர் அமைந்துள்ளது. ஜம்மு நகரத்திலிருந்து 68 கி மீ தொலைவிலும், கட்ராவிலிருந்து 23 கி. மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.

நிர்வாகம்

தொகு

உதம்பூர் நகரம் 22 நகர் மன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

வானிலை

தொகு

கோடைக் காலத்தில் அதிகூடி 40 பாகை செல்சியஸ் வெப்பமும், குளிர்காலத்தில் மைனஸ் 2 முதல் 0 பாகை செல்சியஸ் வெப்பமும் காணப்படும். ஆண்டு சராசரி மழைப் பொழிவு 130 செண்டி மீட்டர் ஆகும். பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Udhampur
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 24
(75)
29
(84)
33
(91)
39
(102)
40.5
(104.9)
40.9
(105.6)
41
(106)
38
(100)
32
(90)
31
(88)
29
(84)
25
(77)
41
(106)
உயர் சராசரி °C (°F) 18.8
(65.8)
21.9
(71.4)
26.6
(79.9)
32.9
(91.2)
38.3
(100.9)
40.6
(105.1)
35.5
(95.9)
33.7
(92.7)
33.6
(92.5)
31.7
(89.1)
26.8
(80.2)
21.1
(70)
30.1
(86.2)
தாழ் சராசரி °C (°F) 1.2
(34.2)
9.7
(49.5)
13.6
(56.5)
19.0
(66.2)
24.4
(75.9)
26.8
(80.2)
24.5
(76.1)
24.0
(75.2)
23.0
(73.4)
18.4
(65.1)
12.6
(54.7)
8.5
(47.3)
17.7
(63.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) -4.4
(24.1)
-3
(27)
3
(37)
6
(43)
7
(45)
13
(55)
13
(55)
8
(46)
12
(54)
4
(39)
2
(36)
-3
(27)
−4.4
(24.1)
மழைப்பொழிவுmm (inches) 50.0
(1.969)
46.4
(1.827)
53.2
(2.094)
26.3
(1.035)
16.0
(0.63)
51.8
(2.039)
283.4
(11.157)
644.5
(25.374)
123.9
(4.878)
38.1
(1.5)
11.9
(0.469)
42.2
(1.661)
1,387.7
(54.634)
Source #1: BBC Weather
Source #2: IMD

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கீட்டின்படி[2] உதம்பூர் நகரத்தின் மக்கட்தொகை 1,82,778 ஆகும். அதில் ஆண்கள் 66% ம் பெண்கள் 34% அடங்குவர். இந்நகரில் இந்திய இராணுவத்தின் வடக்கு தலைமையகம் உள்ளதால் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எழுத்தறிவு விகிதம் 88%. இந்நகரில் 74% மக்கள்இந்து சமயத்தையும், இஸ்லாம், 25% மக்கள் இஸ்லாமையும், 1% மக்கள் சீக்கிய சமயத்தையும் கடைப்பிடிக்கப்பிடிக்கின்றனர். சமயங்கள்.

உதம்பூரில் சமயங்கள்
சமயம் விழுக்காடு
இந்து சமயம்
74%
இசுலாம்
25%
சீக்கியம்
0.7%
பிறர்†
0.3%
Distribution of religions
Includes சீக்கியர்s (0.2%), Buddhists (<0.2%).

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்துகள்

தொகு

நான்கு வழிகள் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 1 எ உதம்பூரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. பேருந்துகள் உதம்பூரின் முதன்மை போக்குவரத்து வண்டிகளாகும்.

தொடருந்து சேவைகள்

தொகு

அண்மையில் நிறுவப்பட்ட 53 கி. மீ., நீண்ட இருப்புப் பாதை, உதம்பூர் நகர தொடருந்து நிலையத்தை, ஜம்மு மற்றும் இந்தியத் தலைநகரம் புதுதில்லியுடன் இணைக்கிறது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=8515
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  3. Udhampur Train Station
  4. http://indiarailinfo.com/departures/udhampur-uhp/2819

16. Pingla Mata Shrine — Pingla Mata Cave is situated in Village Pinger of Ramnagar Tehsil in Udhampur District.

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதம்பூர்&oldid=3601452" இலிருந்து மீள்விக்கப்பட்டது