கட்ரா
கட்ரா, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இது ஜம்மு நகரத்திலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையில் வைஷ்ணவ தேவி கோயில் கோயில் உள்ளது.
கட்ரா
कटरा Katra | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | உதம்பூர் மாவட்டம் |
ஏற்றம் | 875 m (2,871 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,008 |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
Literacy | 70 %% |
போக்குவரத்து
தொகுஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம் உள்ளது. இந்நிலையம் ஜம்மு நகரத்தையும், கட்ராவையும் இணக்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு13 வார்டுகள் கொண்ட கட்ரா நகராட்சியில் 1594 குடும்பங்களையும், 9,008 மக்கள் தொகையும் கொண்டது. அதில் ஆண்கள் 5106 மற்றும் பெண்கள் 3902 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 764 பெண்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.6% உள்ளது. பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1925 மற்றும் 9 ஆக உள்ளனர்.[1]