துளசிமாறன்

துளசிமாறன் யேர்மனியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட[1] ஈழத்துக் குத்துச் சண்டை வீரர்.

குடும்பம்

தொகு

இவரது பெற்றோர்களான நளினி, தருமலிங்கம் தம்பதிகள் ஈழத்தில், பருத்தித்துறை, புலோலி மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவருக்கு குறிஞ்சிமாறன் என்றொரு சகோதரனும், பவித்திரா என்றொரு சகோதரியும் உள்ளார்கள். குறிஞ்சிமாறனும் குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டவர்.

குத்துச்சண்டைப் போட்டி

தொகு

இவர் 125க்கு மேலான குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளர். ஆறு முறைகள் நிடர்சாக்சன்(Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், யேர்மனிய நாட்டில் Bundesliga குத்துச்சண்டைப் போட்டியில் யேர்மனியின் சம்பியனாகவும் வந்துள்ளார். 2016 இல் கோடை ஒலிம்பிக் போட்டியில் கட்டார் நாட்டுக்காக விளையாடியுள்ளார்.[2][3] இவர் தொடர்ந்து நான்கு தடவைகள் குத்துச்சண்டையில் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்துக்கது. இவர் போட்டிகளின் போது தளராது விளையாடுவதால் இவருக்கு Tiger என்ற பட்டப்பெயரும் இருக்கிறது. இவர் 26.05.2018 அன்று யேர்மனியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் போட்டியாளரான KARIMLI யை ஆறு சுற்றுக்கள் மோதி வெற்றி பெற்றுள்ளார்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BoxRec Thulasi Tharumalingam
  2. Schwaneweder Boxtalent bei den Profis
  3. Tamilcnn ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் மொங்கோலிய வீரரிடம் மோதிய ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம் [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசிமாறன்&oldid=3585690" இலிருந்து மீள்விக்கப்பட்டது