துள்ளலோசை
கலிப்பாவிற்கான ஓசை துள்ளலோசை. ஓடையில் ஓடும் நீர் கற்களிலும் பாறைகளிலும் மோதிக் கலிப்பது [1] போல ஓசை கொண்டுள்ள பா-நடை இது.
துள்ளலோசை மூன்று வகைப்படும்:
௧. ஏந்திசைத் துள்ளலோசை
- ஏந்திசைத் துள்ளலோசை எனப்படுவது கலித்தளைகள் (காய் முன் நிரை) மட்டும் கொண்டிருக்கும்.
௨. அகவல் துள்ளலோசை
- அகவல் துள்ளலோசை எனப்படுவது கலித்தளைகள் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் (காய் முன் நேர்) விரவி வரும்.
௩. பிரிந்திசைத் துள்ளலோசை
- பிரிந்திசைத்துள்ளலோசை எனப்படுவது பல தளைகளும் கலந்து வரக்கூடியது.
அடிக்குறிப்பு
தொகு- ↑ துள்ளுவது
கம்பலை, சும்மை, கலியே, அழுங்கல்,
என்று இவை நான்கும் அரவப் பொருள. (தொல்காப்பியம் 2-349)