தூங்கெயில்

தூங்கெயில் என்பது சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கோட்டையாகும். இதைப்பற்றிய குறிப்புகள் புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் இடம்பெற்றுள்ளன.

தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்.
சோழன் குளமுற்றறதுத் துஞ்சிய கிள்ளிவளவன் வானவனீன் வஞ்சி நகரைத் தாக்கி அந்நகர மக்களை வாடும்படி செய்தான். இந்தக் கிள்ளிவளவனின் பெருமை அவனது முன்னோர் மரபிலிருந்து வந்தது என்று அவனைப் பாடிய புலவர் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிடுகிறார். (புறம் 39)
அப்போது புறாவுக்காகத் துலாக்கோலில் அமர்ந்தவனை (சிபிச் சக்கரவர்த்தி) நினைத்தால் உன் கொடைக்குப் பெருமை இல்லை.
பகைவரை நடுங்கச் செய்த 'தூங்கெயில்' கோட்டையைத் துகளாக்கிய உன் முன்னோனை நினைத்தால் நீ பகைவரை அடுதல் பெருமையாகாது.
கரிகாலன் தன் அவையில் நீதியை நிலைநாட்டிய பாங்கை நினைத்தால் உன் அறநெறியும் மேம்பட்டது ஆகாது - என்றெல்லாம் கூறிச்செல்கிறார். கடவுள் அஞ்சி என்பவன் கட்டியிருந்த தூங்கெயில் கோட்டைக் கதவம் பற்றிப் பதிற்றுப்பத்து 31 குறிப்பிடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூங்கெயில்&oldid=3286157" இலிருந்து மீள்விக்கப்பட்டது