தூயமல்லி (நெல்)

தூயமல்லி (Thuyamalli) பாரம்பரிய நெல் வகைகளில் வித்தியாசமானதாக கருதப்படும் இந்நெல் இரகம், வெள்ளை கலந்த மஞ்சள் நிறமாகவும், தூய்மையாகவும் காணபடுகின்றது. பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள இந்த தூயமல்லி நெல்லின் அரிசி, வெள்ளை நிறம் கொண்ட மிக சன்ன இரகமாக உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் தூயமல்லி அரிசியை (சோறு) மிகவும் விரும்பி சாப்பிட்டதுடன், இந்த நெல் இரகத்தைப் பயிர் செய்ய உழவர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர்.[2]

தூயமல்லி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
135 – 140 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1125 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

பயன்பாடு

தொகு

தூயமல்லி எனப்படும் இந்நெல் இரகம், மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மை கொண்டது. இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து மிகுந்து காணப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது, பலகார வகைகளுக்கும் பழைய சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும், மற்றும் இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.[2]

சிறப்பு

தொகு
  • இந்த தூயமல்லி நெல்லை சாகுபடி செய்து அதிக மகசூல் எடுக்க, அக்காலத்தில் உழவர்களிடையே போட்டிகளை நடத்தி பரிசுகளும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[2]
  • இந்நெல் வகை, பூச்சி மற்றும் நோயை எதிர்த்து வளரும் திறன் கொண்டது.[3]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. TNAU Agritech Portal: Traditional Varieties grown in Tamil nadu Thuyamalli
  2. 2.0 2.1 2.2 "மல்லிகைப்பூ போன்ற நெல்". தி இந்து (தமிழ்) - பிப்ரவரி 14, 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-12-22.
  3. Varieties resistant to pest and disease attack

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூயமல்லி_(நெல்)&oldid=3722462" இலிருந்து மீள்விக்கப்பட்டது