தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)
தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா புதுச்சேரியின் இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயமாகும்.[1] 1895ஆம் ஆண்டு, புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் அப்போதைய பேராயர், மேதகு. காந்தி, அம்மறைமாவட்டத்தை இருதய ஆண்டவருக்கு அர்ப்பணித்தார். அதன் நினைவாக இக்கோவில் 1902ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 1907-இல் கட்டி முடிக்கப்பட்டது. மேதகு. காந்தி இவ்வாலயத்தை 17, திசம்பர் 1907-இல் அருட்பொழிவு செய்து, முதல் திருப்பலி நிறைவேற்றினார். இக்கோவிலை தலைமையாகக் கொண்டு 27 சனவரி 1908-இல் புதிய பங்கு நிறுவப்பட்டது.
தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, புதுச்சேரி | |
---|---|
Sacred Heart of Jesus Basilica, Pondicherry | |
இருதய ஆண்டவர் சதுக்கத்திலிருந்து பசிலிகாவின் தோற்றம் | |
அமைவிடம் | புதுச்சேரி, புதுச்சேரி |
நாடு | இந்தியா |
சமயப் பிரிவு | கத்தோலிக்கம் |
வலைத்தளம் | sacredheartpondy.org |
வரலாறு | |
அர்ப்பணிப்பு | தூய இருதய ஆண்டவர் |
நேர்ந்தளித்த ஆண்டு | திசம்பர் 17, 1907 |
நிகழ்வுகள் | பசிலிக்காவாக உயர்த்தப்பட்டது: 02 செப்டம்பர் 2011 |
Architecture | |
நிலை | இளம் பேராலயம் (பசிலிக்கா) மற்றும் பங்கு ஆலயம் |
செயல்நிலை | நடப்பில் உள்ளது |
கட்டடக் கலைஞர் | அருட்தந்தை தெலெஸ்போர் வெல்டர் |
கட்டடக் வகை | பெருங்கோவில் |
பாணி | கோதிக் |
ஆரம்பம் | 1902 |
நிறைவுற்றது | 1907 |
இயல்புகள் | |
கொள்ளவு | 2000 |
நீளம் | 50 m (160 அடி) |
அகலம் | 48 m (157 அடி) |
உயரம் | 18 m (59 அடி) |
பொருள் | செங்கல் |
நிருவாகம் | |
பங்குதளம் | இருதய ஆண்டவர் பங்கு |
உயர் மறைமாவட்டம் | புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம் |
குரு | |
பேராயர் | அந்தோணி ஆனந்தராயர் |
அதிபர் | அருட்தந்தை மரிய ஜோசப் |
பசிலிக்காவாக
தொகு2008-2009ஆண்டு இவ்வாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதன் முடிவில் இவ்வாலயத்தை பசிலிக்காவாக மாற்ற முயற்சிகள் துவங்கின.[2][3]
02, செப்டம்பர், 2011-அன்று திருப்பீட இந்திய தூதுவர், பேராயர் சால்வதோர் பெனோகியோ அவர்கள் இக்கோவிலுக்கு வந்து, திருத்தந்தையின் சார்பாக இதனை பசிலிக்காவாக உயர்த்தினார்.[4]
இது இம்மறைமாவட்டத்தின் முதல் பசிலிக்காவாகும். இதனோடு சேர்த்து, தமிழகத்தில் 6, இந்தியாவில் 20 மற்றும் ஆசியாவில் 50 பசிலிகாக்களும் உள்ளன.
படத்தொகுப்பு
தொகு-
ஆலயத்தின் பழைய பீடம்
-
ஆலயத்தின் புதிய பீடம்
ஆதாரங்கள்
தொகு- ↑ Lonely Planet Review [1].
- ↑ Centenary Celebrations - Video
- ↑ "The Hindu: Centenary celebrations of church come to an end". Archived from the original on 2012-11-09. பார்க்கப்பட்ட நாள் 2011-09-03.
- ↑ "Deccan Chronicle: Sacred Heart receives Basilica status". Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-03.