தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை

தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி (St. Xavier's Higher Secondary School) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை நகரத்தில் 1880-ஆம் ஆண்டில் இயேசு சபை பாதிரிமார்களால் துவக்கப்பட்டது.[1]


வரலாற்று நிகழ்வுகள்[1]:

1880: புனித சவேரியார் பள்ளி தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையம்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது .

1884: முதல் முதலாக உயர்நிலை பள்ளி இறுதி (மெட்ரிகுலேஷன் எக்ஸாம்) படிப்புக்கு மாணவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

1898: பள்ளிக்கு  மாவட்ட நிர்வாகம் நிரந்தர  அங்கீகாரம் வழங்கியது

1899: உறைவிட பள்ளியாக விரிவாக்கம் செய்யப்பட்டது, மேலும் 1903 இல் 10 மாணவர்களை கொண்டு தங்கும் விடுதி ஆரம்பிக்கப்பட்டது.

1910: உயர் நிலைப்பள்ளி (SSLC) தொடங்கப்பட்டது.

1917: பள்ளிக்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

1922: புதிதாக கட்டப்பட்ட மாணவர் விடுதி ஆரம்பமாகியது. இது தான் இன்றைய Sacred Heart Hostel

1935: சாரணியர் இயக்கம் தொடங்கப்பட்டது

1940களில் பள்ளியின் பத்திரிக்கை, இலக்கிய மற்றும் விவாத கழகங்கள், தேசிய மாணவர் படை, ஹிந்தி மொழி ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.

1950 களில் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம், ஆசிரியர்களுக்கான கூட்டுறவு மற்றும் கடன் சங்கங்கள், பொறியியல் பிரிவு  ஆகியவை ஆரம்பிக்கப்பட்டன .

1980களில் பள்ளியின் 100 வருட நிறைவை ஒட்டி நூற்றாண்டு கட்டிடம் கட்டப்பட்டது. 1982 நம் பள்ளியின் மாணவர்கள் SSLC தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றார்கள். மாணவர்களுக்காக கலை வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.

1990 களில் லயோலா ஸ்டடி சென்டர், LASAC இயக்கம், மற்றும் மாணவர்களால் நடத்தப்படும் STAAR தொண்டு அமைப்பு ஆகியவை ஏழை மற்றும் கிராமப்புற பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காக தொடங்கப்பட்டது. அதே ஆண்டுகளில் உயிரியல் செய்முறை  மற்றும் கணினி பயிற்சிக்கூடங்கள் தொடங்கப்பட்டன.

2000 புதிய AARUPE நிர்வாக வளாகம் திறக்கப்பட்டது.

2011: புதிய தோட்டங்களுடன் நுழைவு வாயில்  விரிவாக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Alumni". Archived from the original on 2015-11-24. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.

வெளி இணைப்புகள்

தொகு