தெக்கான் பார்க்கு

இந்திய கட்டடம்

தெக்கான் பார்க்கு (Deccan Park) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய ஓர் உலகளாவிய வளர்ச்சி மையம் ஆகும்.[1][2] இந்த மையத்தை சுவிசு நாட்டு கட்டடக் கலைஞரான மரியோ போட்டா வடிவமைத்துள்ளார்.[3]

தெக்கான் பார்க்கு
பொதுவான தகவல்கள்
நகரம்ஐதராபாத்து (இந்தியா)
நாடுஇந்தியா
கட்டுமான ஆரம்பம்2000
நிறைவுற்றது2004
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)மரியோ போட்டா

வசதிகள் தொகு

தெக்கான் பார்க்கு மையம் 1.50 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் பொழுது போக்கு மற்றும் விளையாட்டு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2,200 தொழில் வல்லுநர்கள் இடம் பெறுவார்கள். 11 ஏக்கர் (45,000 மீ2) நிலப்பரப்பில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 320,000 சதுர அடிகள் கொண்ட 9 மாடிகளுடன் கூடிய கட்டப்பட்ட பரப்பளவு கொண்டது. தொலைத்தொடர்பு, மின்-ஆளுமை, உயிரியல் அறிவியல், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற அறிவுசார் துறைகளில் சிறந்து விளங்கும் இடமாக அமையும். வலைப்பின்னல், கட்டற்ற மூல மென்பொருள், பட்டியலிடல் மற்றும் உயிர்த் தகவலியல் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் இங்கு இடம்பெறும்.

திறப்புவிழா தொகு

தெக்கான் பார்க்கு மையத்தை சுவிசு கூட்டமைப்பு தலைவர் பாசுகல் கூசெபின் திறந்து வைத்தார். இவ்விழாவுக்கு தெலுங்கானா மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு முன்னிலை வகித்தார். பங்கு விலக்கல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அருண் சோரி, டாடா குழுமத்தின் தலைவர் இரத்தன் டாட்டா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெக்கான்_பார்க்கு&oldid=3793171" இலிருந்து மீள்விக்கப்பட்டது