தெக்கினீசியம்(III) குளோரைடு

வேதிச் சேர்மம்

தெக்கினீசியம்(III) குளோரைடு (Technetium(III) chloride) என்பது TcCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தெக்கினீசியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தெக்கினீசியம்(III) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தெக்கினீசியம் முக்குளோரைடு, தெக்கினீசியம் டிரைகுளோரைடு
இனங்காட்டிகள்
1255775-02-0
ChemSpider 26946114
InChI
  • InChI=1S/3ClH.Tc/h3*1H;/q;;;+3/p-3
    Key: XAEYUXPVCBLTEP-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cl-].[Cl-].[Cl-].[Tc+3]
பண்புகள்
Cl3Tc
வாய்ப்பாட்டு எடை 204.35 g·mol−1
தோற்றம் கருப்பு திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

தெக்கினீசியம்(III) குளோரைடு சேர்மத்தின் டெக்னீசியம் இரண்டு வகைகள் அறியப்படுகின்றன. α-வடிவ தெக்கினீசியம்(III) குளோரைடு 300 பாகை செல்சியசு வெப்பநிலையில் டைதெக்கினீசியம்(III) டெட்ரா அசிட்டேட்டு டைகுளோரைடுடன் ஐதரசன் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கருப்பு நிறத் திடப்பொருளாக உருவாகிறது. C3v சமச்சீருடன் முக்கோண அமைப்பும் Tc3Cl9 அலகுகளும் கொண்ட ஈரெண்முகக் கட்டமைப்பில் α-வடிவ தெக்கினீசியம்(III) குளோரைடு காணப்படுகிறது. ஒவ்வொரு Tc அணுவும் அருகிலுள்ள இரண்டு Tc அணுக்களுடனும் ஐந்து குளோரைடு ஈந்தணைவிகளுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. Tc-Tc பிணைப்பு நீளம் 2.44 ஆங்சுட்ராங்கு அலகுகளாகும். Tc-Tc பிணைப்பு தூரங்கள் இரட்டைப் பிணைப்பு Tc அணுக்களைக் குறிக்கின்றன. Tc3Cl9 இரேனியம் ஒப்புமையான டிரையிரேனியம் நோனாகுளோரைடுடன் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது.[1]

β-தெக்கினீசியம்(III) குளோரைடு சேர்மமானது TcCl3 தெக்கினீசியம் உலோகத்திற்கும் குளோரின் வாயுவிற்கும் இடையிலான வினையால் பெறப்படுகிறது. இதன் கட்டமைப்பு MoCl3 மற்றும் ReCl3 போன்ற விளிம்பு-பகிர்வு எண்கோணங்களின் எல்லையற்ற அடுக்குகளைக் கொண்டுள்ளது. பிணைப்பு இடைவெளிகள் உலோக-உலோக பிணைப்பைக் குறிக்கின்றன. α-TcCl3 சேர்மத்தை விட குறைவான நிலைப்புத் தன்மை கொண்ட β-தெக்கினீசியம்(III) குளோரைடு மெதுவாக α- வகைக்கு மாறுகிறது..[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Poineau, Frederic; Johnstone, Erik V.; Weck, Philippe F.; Kim, Eunja; Forster, Paul M.; Scott, Brian L.; Sattelberger, Alfred P.; Czerwinski, Kenneth R. (2010). "Synthesis and Structure of Technetium Trichloride". Journal of the American Chemical Society 132 (45): 15864–5. doi:10.1021/ar400225b. பப்மெட்:24393028.