தெக்கு சந்து
தெக்கு சந்து (Tek Chand ) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரராவார். குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக இவர் விளையாடுகிறார்.[1][2][3] அரியானா மாநிலத்தின் ரேவாரி மாவட்டத்தில் பிறந்த இவர், ஒரு சாலை விபத்தினால் மாற்றுத் திறனாளியானார்.[4] டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் போட்டியின் எப்55 வகை போட்டிப் பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[5][6] இப்போட்டியின் தொடக்க விழாவில் தனிமைப்படுத்தப்பட்ட மாரியப்பன் தங்கவேலுக்குப் பதிலாக இந்தியக் குழுவின் கொடி ஏந்துபவராக இவர் நியமிக்கப்பட்டார்.[7][8] 9.04 மீட்டர் தொலைவுக்கு எறிந்தவராக இருந்தாலும் எட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்ட அப்போட்டியில் இவரால் கடைசி இடத்தையே பிடிக்க முடிந்தது.[9][10] முதலில் ஆண்களுக்கான எப்54 வகை ஈட்டி எறிதல் போட்டிக்காக இவர் பட்டியலிடப்பட்டார், ஆனால் பின்னர் சேர்க்கப்பட்டார்.[11] 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.[4][12]
தனிநபர் தகவல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | ||||||||||
விளையாட்டு | |||||||||||
நிகழ்வு(கள்) | ஈட்டி எறிதல் (எப்54) மற்றும் குண்டு எறிதல் (விளையாட்டு) (எப்55) | ||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||
மாற்றுத் திறனாளர் இறுதி | 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | ||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "PCI picks 24 para athletes for Tokyo Paralympics". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-07-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
- ↑ Sportstar, Team. "Tokyo Paralympics: Indians in action on August 27 - Tek Chand to compete in men's shot put F55 final". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
- ↑ "Tokyo Paralympics Declared Open, Tek Chand Leads Indian Contingent at Opening Ceremony". News18 (in ஆங்கிலம்). 2021-08-24. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
- ↑ 4.0 4.1 thebridge (2021-08-24). "Who is Tek Chand - India's flag bearer at Tokyo Paralympics?". thebridge.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
- ↑ "Tokyo Paralympics: PM Modi wishes para-athletes as Tek Chand leads India in inspiring opening ceremony". இந்தியா டுடே.
- ↑ "Tokyo Paralympics: Vinod Kumar, Tek Chand Among 5 Indian Athletes To Attend Opening Ceremony | Olympics News". NDTVSports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
- ↑ "Tokyo Paralympics: Javelin thrower Tek Chand lead India's charge during Opening Ceremony". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-08-24. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
- ↑ "Tek Chand named new flag-bearer in Paralympics opening ceremony". 24 August 2021. https://www.aninews.in/news/sports/others/tokyo-paralympics-javelin-thrower-tek-chand-named-new-flag-bearer-of-india-for-opening-ceremony20210824110809. பார்த்த நாள்: 4 October 2022.
- ↑ "Paralympics 2021: Tek Chand finishes 8th in men's shot put final | Tokyo Paralympics News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). ANI. 27 Aug 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
- ↑ Sportstar, Team. "Tokyo Paralympics 2020: Tek Chand finishes last in Shot Put Final". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
- ↑ "Paralympics 2021: Tek Chand finishes 8th in men's shot put final | Tokyo Paralympics News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). ANI. 27 Aug 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
- ↑ Imtiaz, Md (2021-08-27). "Tokyo Paralympics: Tek Chand finishes eighth in Men's F55 Shot Put". thebridge.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
புற இணைப்புகள்
தொகு- Tek Chand at paralympic.org