தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
இந்தியாவின் இருப்பூர்தி மண்டிலம்
தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (South Eastern Railway(SER)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையிடம் கொல்கத்தாவின் கார்டன்ரீச் பகுதியில் உள்ளது.[1] இது நான்கு கோட்டங்களை உள்ளடக்கியது[2].
- ஆத்ரா தொடருந்து கோட்டம்
- சக்ரதார்பூர் தொடருந்து கோட்டம்
- கரக்பூர் தொடருந்து கோட்டம்
- ராஞ்சி தொடருந்து கோட்டம்
5- தென்கிழக்கு தொடருந்து மண்டலம் | |
கிழக்கு மற்றும் தென்கிழக்கு தொடருந்து மண்டலத்தின் தலைமையிடம் (ஹவுரா) | |
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | கார்டன் ரீச்[1], கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
வட்டாரம் | மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா |
செயல்பாட்டின் தேதிகள் | 1955–தற்போது வரை |
முந்தியவை | கிழக்கத்திய இரயில்வே |
Other | |
இணையதளம் | SER official website |
தலைமையகம்
தொகுஇந்த மண்டலத்தின் தலைமையகமான கார்டன்ரீச்சில், பங்கிம் சந்திரர் நூலகம் உள்ளது. இங்கு ஏறத்தாழ 14,000 நூல்கள் உள்ளன. ரயில்வேயின் கொள்கைகள், வழிமுறைகள் உள்ளிட்டவற்றை பற்றிய நூல்களும், கணினியியல், தன்வரலாறு, கதைப் புத்தகங்களும் உள்ளன.[1]