தென்கோடி ருத்ரகோடீசுவரர் கோயில்
தென்கோடி ருத்ரகோடீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுதிருத்துறைப்பூண்டியிலிருந்து மருதூர் இரட்டைக்கடியடி வழியாக பஞ்சநதிக்குளம் கிழக்கு பகுதிக்கு அருகே கோயில் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் ருத்ரகோடீசுவரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுதிருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சூரியன், நாத லிங்கம், சந்திரன், சனி பகவான் சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறம் இறைவியின் சன்னதி உள்ளது. [1]