தென்னாபிரிக்காவில் தமிழ் கல்வி

இந்த கட்டுரை, தென்னாபிரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்றுத் தரப்பட்டதைப் பற்றியது. இவர்கள் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பே தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்டனர்.

வரலாறுதொகு

19-ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவ அரசால் கொண்டுவரப்பட்ட இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர் ஆவர். இவ்வாறு ஏறக் குறைய 1860 களில் இருந்து தென் ஆபிரிக்காவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அச்சமயம் வந்தவர்களில் பலர் படிப்பறிவு பெற்று இருக்கவில்லை. மேலும் அடிமை போன்ற வாழ்க்கைச் சூழ்நிலையில் மொழியையும் பண்பாட்டையும் பேண வசதி இருக்கவில்லை.

கட்டாய தொழிலில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் ஆபிரிக்கத் தமிழர்கள் தமிழ் மொழி மீது சற்றுக் கூடிய அக்கறை காட்டினார்கள். அச்சமயம் இந்தியாவில் இருந்து வந்திருந்த தமிழ்ப் பயணிகள் இதில் உதவினார்கள்.

1915 ஆண்டு அளவில் பல்வேறு தனியார் தமிழ்ப் பள்ளிகள் நடால், டிரான்ஸ்வால், கேப் ஆகிய இடங்களில் தோன்றின. 1950 களில் ஆபிரிக்க வெள்ளை இனவாத அரசால் அமுல்படுத்தப்பட்ட Group Areas Act தமிழர்களின் மொழிப் பண்பாட்டு பேணலுக்கு கெடுதலாக அமைந்தது. 1985 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் இந்திய மொழிகள் கற்பதற்கான அதிகார பூர்வ ஆதரவு கிடைத்தது. இது இந்தியர்கள் தென் ஆபிரிக்கா வந்து 150 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். எனினும் தமிழ் மொழியை கற்காத, பேசாத ஒரு தமிழ்த் தலைமுறை உருவாகி விட்டு இருந்தது. இதனால் இந்த தமிழ்ப் பள்ளிகளுக்கு போதிய மாணவர்கள் சேரவில்லை. இதனால் குவாசூலு- நடால் பல்கலைக்கழகத்தில் இருந்த தமிழ்த் துறையும் பூட்டப்பட்டது.

தற்கால நிலைதொகு

2014-ஆம் ஆண்டில், தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளை அரசுப் பள்ளிகளில் கற்பிக்க வாய்ப்பளித்தது தென்னாப்பிரிக்க அரசு. இதற்கு முன்னர், 1994 ஆம் ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் இவை கற்பிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அரசப் பாடத்திட்டத்தை பின்பற்றாத பள்ளிகளிலும் இந்த மொழிகள் கற்பிக்கப்பட்டன. தற்போது மீண்டும் அரசுப் பள்ளிகளில் அரசப் பாடத்திட்டத்துக்கு ஏற்ப கற்பிக்கப்படுகின்றன. குவாசூலு- நடால் பகுதியில் மட்டும் இந்த மொழிகளை பள்ளிகளில் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழை படிக்க விரும்பும் மாணவர்கள், மூன்றாவது மொழிப் பாடமாக தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.[1][2]

பல்கலைக்கழகங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

இணைப்புகள்தொகு

  1. தென்னாப்பிரிக்காவில் தமிழ்க் கல்வி
  2. ஐந்து இந்திய மொழிகளில் கல்வி - குவாசூலு - நடல் கல்வி அமைச்சகம்