தென்பரதவர்

தென்பரதவர் என்போர் தமிழ்நாட்டின் தென்பகுதியில் கொற்கைப் பகுதியில் முத்துக் குளிக்கும் தொழில் செய்துவந்த மக்கள்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில் இவர்கள் தன் அரசன் பாண்டியனுக்கு எதிராகப் போரிட்டனர். இவர்களோடு நெடுஞ்செழியன் போரிட்டு அடக்கினான்.[1]

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தென்பரதவரின் வலிமையைப் குன்றச் செய்தான்.[2]

இவற்றையும் காண்கதொகு

அடிக்குறிப்புதொகு

  1. தென்பரதவர் போர் ஏறே - மதுரைக்காஞ்சி 144
  2. தென்பரதவர் மிடல் சாய, வடவடுகர் வாள் ஓட்டிய ... சோழன் - புறநானூறு 378
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்பரதவர்&oldid=1466889" இருந்து மீள்விக்கப்பட்டது