தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயில்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்
தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயில் என்பது விழுப்புரம் மாவட்டம் தென்பொன்பரப்பி எனும் கிராமத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் சொர்ணபுரீசுவரர் என்றும், அம்பிகை உமையாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் 1300 ஆண்டுகள் பழமையானதாகும்.
தல வரலாறு
தொகுகாகபுஜண்டர் 18 சித்தர்களின் தலைவராக கருதப்படுகிறார். அவர் இத்தலத்தில் 16 ஆண்டுகள் கடும்தவமிருந்து அதன் பயனாக 16 முகங்கள் கொண்ட சோடச லிங்கத்தின் தரிசனம் பெற்றார். அதைப் போன்ற சிவலிங்கத்தினை உருவாக்கி தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த வானகோவராயன் எனும் மன்னனிடம் அளித்தார்.[2] மன்னர் இந்த லிங்கத்தினை வைத்து கோயில் அமைத்தார்.
விழாக்கள்
தொகுதல சிறப்பு
தொகு- இச்சிவாலயத்தின் மூலவரான சொர்ணபுரீசுவரர் லிங்க வடிவில் காட்சிதருகிறார். இந்த லிங்கம் சோடச லிங்கம் எனப்படும் 16 பட்டைகளுடன் கூடியதாகும்.
- ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தன்று காலையில் பாலநந்தியின் இரண்டு கொம்புகளிடையே சூரிய ஒளியானது சென்று சிவலிங்கத்தின் மீது படுகிறது.
- இந்த லிங்கம் நவபாசாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை உடையது. மேலும் 5.5 அடி உயரம் கொண்டது.
- காகபுஜண்டரின் சமாதி இக்கோயிலுக்கு அருகே உள்ளது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "Swarnapureeswarar Temple : Swarnapureeswarar Swarnapureeswarar Temple Details | Swarnapureeswarar- Tenponparappi | Tamilnadu Temple | சொர்ணபுரீஸ்வரர்". temple.dinamalar.com.
- ↑ "காகபுஜண்டரின் ஜீவசமாதி கொண்ட -சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி | Chennai Today News". 21 ஏப்., 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)