தென்மேற்கு காரோ மலை மாவட்டம்

தென்மேற்கு காரோ மலை மாவட்டம்[1] இந்திய மாநிலமான மேகாலயாவின் மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தின் தலைநகரமாக அம்பாதி நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் 2012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[2] இந்த மாவட்டத்தின் உருவாக்க நிகழ்ச்சியில் அப்போதைய மேகாலயா முதல்வர் முகுல் சங்மா தலைமையேற்றார்.

MeghalayaSouthWestGaroHills.png
தென்மேற்கு காரோ மாலிமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா
மாநிலம்மேகாலயா, இந்தியா
தலைமையகம்அம்பாதி
பரப்பு822 km2 (317 sq mi)
மக்கட்தொகை1,72,495 (2011)
படிப்பறிவு56.7%
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
மாவட்ட உருவாக்க நிகழ்ச்சி

மக்கள் தொகைதொகு

இந்த மாவட்டத்தில் 1,72,495 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 87,135 ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இந்த மாவட்டத்தில் 56.7% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[3]

சான்றுகள்தொகு