தெற்கு ஆளுநரகம், லெபனான்
தெற்கு கவர்னரேட் (South Governorate, அரபு மொழி: الجنوب என்பது லெபனானின் ஆளுநரகங்களில் ஒன்றாகும். தெற்கு லெபனானில் 500,000 மக்கள் வசிக்கின்றனர். இதன் பரப்பளவு 929.6 கி.மீ² ஆகும். மாகாணத்தின் தலைநகர் சிதோன் நகரமாகும். ஆளுநரகமானது கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைந்த உயரம்; அதிகபட்சம் 1,000 மீட்டர் கொண்டதாக உள்ளது. உள்ளூர் மக்கள் சமய ரீதியாக வேறுபட்டவர்களாக உள்ளனர். இவர்களிள் ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள், டுரூஸ் சமயத்தினர், ஆர்த்தடாக்ஸ், மரோனைட், சீர்திருத்த கிறித்தவம் மற்றும் கிரேக்க கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உள்ளனர். வெப்பநிலையானது குளிர்காலத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தும் அதிக அளவு மழையும் பணியும் பெய்யும். ஈரப்பதமான கோடையில், வெப்பநிலை கடலோரப் பகுதிகளில் 30 ° C. ஆக உயரும். ஆளுநரகத்தில் பல ஆறுகள் பாய்கின்றன அவை லிட்டானி, சஹ்ரானி, நக்ரா, அவாலி, காஸ்மியே ஹஸ்பானி ஆகும். இப்பிராந்தியமானது ஆரஞ்சு வகை மற்றும் வாழை பண்ணைகளுக்கு பிரபலமானது. சிதோன், தயர் மற்றும் ஜெசின் ஆகியவை இதன் முக்கிய நகரங்கள்.
தெற்கு
الجنوب Gouvernorat du Liban-Sud | |
---|---|
லெபனானில் தெற்கு ஆளுநரகத்தின் அமைவிடம் | |
நாடு | லெபனான் |
தலைநகரம் | சிதோன் |
அரசு | |
• ஆளுநர் | மன்சூர் தௌ |
பரப்பளவு | |
• மொத்தம் | 929.6 km2 (358.9 sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நள) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கி.ஐ.கோ.நே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | LB-JA |
காணத்தக்க இடங்கள் மற்றும் நிகழ்வுகள்
தொகுஇப்பிராந்தியத்தில் தயருக்கு தெற்கே உள்ள அழகிய வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் பண்டைய நகரங்களான சிதோன் மற்றும் தயர் அருகே நீரில் மூழ்கிய பீனீசியன் மற்றும் ரோமானிய இடிபாடுகளில் உள் நீச்சல், குதித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் கொண்ட ஏராளமான இடங்களைக் கொண்டுள்ளது. கலாச்சார-காதலர்கள் பரபரப்பான உதுமானியர் கால கடைவீதிகளைக் கண்டு களிப்பார்கள். மேலும் மத்தியதரைக் கடலில் அவ்வளவாக காண முடியாத கடல் உணவக விடுதியில் தங்கி ஓய்வெடுக்கலாம். தெற்கு லெபனான் தயர் திருவிழாவை நடத்துகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
தெற்கு ஆளுநரகத்தில் சமயம்
தொகுஷியாக்கள் ஆளுநரகத்தில் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்கள் சஹ்ரானி டயர் மாவட்டங்களில் முக்கியமாக வாழ்கின்றனர். ஆளுநரகத்தின் தலைநகரான சைடாவானது பெய்ரூட் மற்றும் திரிப்போலிக்கு அடுத்தபடியாக லெபனானில் மூன்றாவது பெரிய நகரமாகவும், சுன்னி முசுலீம்களின் வாழ்விடமாகவும் உள்ளது. கிறிஸ்தவர்கள் முக்கியமாக ஜெஸ்ஸின் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மற்றும் லெபனானில் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான டயர் நகரில் ஒரு சிறிய சமூகமாகவும் உள்ளனர்.
மாவட்டங்கள்
தொகு- ஜெசின்
- சீதோன்
- தயர்
நகரங்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ ""Lebanon State of the Environment Report", chapter 1" (PDF). Ministry of Environment (Lebanon). 2001. Archived from the original (PDF) on 2009-03-25. பார்க்கப்பட்ட நாள் 2013-11-25.