தெலங்கானா தாய்

தெலங்காணா தாய் தெய்வம்

தெலங்காணா தல்லி (Telangana Thalli) எனப்படும் தெலங்காணா தாய் என்பது தெலங்காணா மக்களின் ஒரு அடையாள தாய் தெய்வம் ஆகும். இது தெலங்காணா மாநிலம் மற்றும் தெலங்காணா பேச்சுவழக்கை ஒரு தேவியின் உருவகமாக தெலங்காணா மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [1] [2] [3]

வாரங்கலில் தெலங்காணா தல்லி சிலை
தெலங்காணா தல்லி

வரலாறு

தொகு

தெலங்காணா தல்லியின் சிலையானது முதலில் தெலங்காணாவின் நிர்மலைச் சேர்ந்த பி. வெங்கடரமணாச்சாரி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. பின்னர் 2003-இல் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தெ.ரா.ச. கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டது. தெலங்காணா பகுதியில் தெலுங்கு தல்லி இருப்பதை கேள்விக்குள்ளாக்கிய தெலங்காணா போராட்டத் தலைவரான க. சந்திர சேகர் ராவிடமிருந்து வெங்கடரமணா உத்வேகம் பெற்றார். [4] சிலையின் துவக்க வடிவமைப்பு இந்தியத் தாய் உருவத்தை ஒத்து உருவாக்கப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்டது. 2015-ஆம் ஆண்டு விடுதலை நாளை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டாவில் அவரது பணிக்காக முதல்வர் கே. சந்திரசேகர் ராவால் பாராட்டப்பட்டார்.

உருவகம்

தொகு

2003-இல் தெலங்காணா தல்லியின் சிலை உருவம் வெளியான உடனேயே, தெலங்காணா மக்களின் தனி மாநிலத்திற்கான போராட்டத்தின்போது இந்த உருவம் ஒரு அடையாளச் சின்னமாக மாறியது. மேலும் தெலுங்கு தல்லியைப் போலவே மாநிலத்தின் உருவகமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனி மாநிலத்திற்கான தெலங்காணா போராட்டத்தின்போது, தெலங்காணா பகுதி தெலுங்கர்களுக்கு தனி அடையாளம் வேண்டும் என்ற விருப்பத்தினால், ஆந்திர மாதாவாக இருந்த தெலுங்கு தல்லியை நிராகரித்து தெலங்காணா தல்லியை ஏற்றனர். [5]

சிலை

தொகு

மகுடத்துடன் கூடிய அம்மன் சிலை, ஒரு கையில் மக்காச்சோளக் கதிரை ஏந்தி இருக்கிறார். இது பிராந்தியத்தின் செழிப்பைக் காட்டுவதாக உள்ளது. அதே நேரத்தில் தெலங்காணாவின் தனித்துவமான, பண்பாட்டு அடையாளமான பதுகம்மா, மற்றொரு கையில் ஏந்தியவாறு இருக்கும்.

தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் 2017 திசம்பரில் நடைபெற்ற முதல் உலக தெலுங்கு மாநாட்டின் நினைவாக, பொட்டி சிறீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தின் சிற்பத் துறையால் புதிய தெலங்காணா தல்லி சிலை வடிவமைக்கப்பட்டு செதுக்கப்பட்டது. [6]

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "'Jaya Jaya He Telangana' to be the new state song". Deccan Chronicle. 26 May 2014.
  2. "Salaam Telangana: Hopes soar in Telangana as India sees birth of its 29th state". The Times of India.
  3. "Colourful Police Parade Marks Official T State Day". The New Indian Express.
  4. "Creator of Telangana Thalli honoured". The Hindu. 16 August 2015.
  5. "Ahead of World Telugu Conference, controversy rages over 'Telugu Talli' and 'Telangana Talli'". The Times of India.
  6. Reddy, R. Ravikanth (14 December 2017). "Telangana Talli statue gets sculpted for WTC". The Hindu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலங்கானா_தாய்&oldid=3668826" இலிருந்து மீள்விக்கப்பட்டது