தெலுங்கு மொழி நாள்
தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காகவும், பயன்பாட்டை ஊக்குவிக்கவும் தெலுங்கு மொழி நாள் கொண்டாடப்படுகிறது. கிடுகு வெங்கட ராமமூர்த்தி என்ற தெலுங்கு மொழிக் கவிஞரின் பிறந்த நாளான ஆகஸ்டு 29ஆம் நாளை, தெலுங்கு மொழி நாளாகக் கடைபிடிக்கின்றனர். சமசுகிருதச் சொற்களை மிகுந்தியாகக் கொண்ட எழுத்து நடையை மாற்றி, தெலுங்கு மொழியை எளிய நடையில் எழுத வலியுறுத்தினார்.[1] ஆந்திர மாவட்டங்களில் தெலுங்கு மொழி நாளைக் கொண்டாட மாநில அரசு நிதி வழங்கியுள்ளது. இந்த நாளின் நிகழ்வுகளை ஆந்திர அரசின் பண்பாட்டு அமைச்சகம் முன்னின்று நடத்தும். சிறந்த கவிஞர்களுக்கு பரிசுகளும் பணமுடிப்பும் வழங்கப்படும். [2]
மேலும் பார்க்கதொகு
சான்றுகள்தொகு
- ↑ "ஆந்திர மாவட்டங்களில் தெலுங்கு மொழி நாள்". 2014-08-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ தெலுங்கு மொழி நாள்