தெலூராக்சைடு

தெலூரியம் சேர்மம்

தெலூராக்சைடு (Telluroxide) என்பது R2TeO என்ற மூலக்கூறுவாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமதெலூரியம் சேர்மமாகும். பல பிணைப்புகளை உருவாக்குவதற்கான தெலூரியத்தின் குறைவான போக்கைப் பிரதிபலிக்கும் போது தெலூராக்சைடு சேர்மங்கள் சில பண்புகளில் சல்பாக்சைடுகளை ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன. தெலூராக்சைடுகள் ஒருபடி சேர்மங்கள், பல்படி சேர்மங்கள் என்ற இரண்டு வகை சேர்மங்களாகவும் காணப்படுகின்றன. இவ்வகைகள் முறையே கரைசல்களிலும் திண்மநிலையிலும் சாதகமாக கிட்டைக்கின்றன. [1] தெலூரோயீத்தர்களை ஆலசனேற்றம் செய்து தொடர்ந்து கார நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி தெலூராக்சைடுகள் தயாரிக்கப்படுகின்றன.

R2Te + Br2 → R2TeBr2
R2TeBr2 + 2 NaOH → R2TeO + 2 NaBr + H2O

மேற்கோள்கள்

தொகு
  1. Jens Beckmann, Dainis Dakternieks, Andrew Duthie, François Ribot, Markus Schürmann, and Naomi A. Lewcenko "New Insights into the "Structures of Diorganotellurium Oxides. The First Polymeric Diorganotelluroxane [(p-MeOC6H4)2TeO]n" Organometallics, 2003, volume 22, 3257–3261. எஆசு:10.1021/om021024c
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலூராக்சைடு&oldid=3067019" இலிருந்து மீள்விக்கப்பட்டது