தெலூரேட்டு

ஆக்சியெதிர்மின் அயனிச் சேர்மம்

தெலூரேட்டு (Tellurate) என்பது தெலூரியத்தின் ஆக்சியெதிர்மின் அயனியை கொண்ட ஒரு சேர்மம் ஆகும். இதில் தெலூரியம் +6 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. கனிமச் சேர்மங்களின் பெயரிடுதலில் இது ஒரு பின்னொட்டாகச் சேர்க்கப்படுகிறது. மைய தெல்லூரியம் அணுவுடன் ஒரு பல்லணுயெதிர்மின் அயனி சேர்ந்துள்ளது என்பதை இப்பின்னொட்டு குறிக்கிறது[1].

மெட்டாதெலூரேட்டு மற்றும் ஆர்த்தோதெலூரேட்டுகளின் கட்டமைப்பு

தெலூரியத்தின் ஆக்சியெதிர்மின் அயனிகள்

தொகு

வரலாற்று ரீதியாக தெலூரேட்டு என்ற பெயர் தெலூரியம் தனிமத்தின் தெலூரியம் +6 ஆக்சிசனேற்ற நிலையிலுள்ள ஆக்சியெதிர்மின் அயனியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இது தெலூரிக் அமிலத்திலிருந்து (Te(OH)6,) வழிப்பெறுதியாக வரவழைக்கப்பட்டது. இதேபோல தெலூரியம் தனிமத்தின் தெலூரியம் +4 ஆக்சிசனேற்ற நிலையிலுள்ள ஆக்சியெதிர்மின் அயனியைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இது தெலூரசு அமிலத்திலிருந்து ((HO)2TeO) வழிப்பெறுதியாக வரவழைக்கப்பட்டது. இந்த இரண்டு பெயர்களும் பொதுவான பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும், தெலூரேட்டு மற்றும் தெல்லூரைட்டு என்ற பெயர்கள் ஐ.யு.பி.ஏ.சி முறை மறுபெயரிடும் பரிந்துரைகளுக்கு ஏற்ப முறையே தெல்லூரேட்டு (VI) மற்றும் தெல்லூரேட்டு (IV) என குறிப்பிடப்படுகின்றன [1]. TeO2−4 என்பது மெட்டாதெலூரேட்டு அயனியாகும்..TeO6−6 என்பது ஆர்த்தோதெல்லூரேட்டு அயனியாகும். இவை தவிர TeO6−6 என்ற பெண்டா ஆக்சோதெலூரேட்டு அயனி [2], Te2O8−10 என்ற டைதெலூரேட்டு அயனி [3] மற்றும் TeO4−5)n. போன்ற ஆறு ஒருங்கிணைவு தெலூரியப் பல்பகுதி எதிர்மின் அயனி ஆகிய ஆக்சியெதிர்மின் அயனிகளும் அறியப்படுகின்றன [4].

மெட்டாதெலூரேட்டுகள்

தொகு

மெட்டாதெலூரேட்டு அயனி TeO2−4 என்பது சல்பேட்டு அயனிக்கும் SO2−4 . மற்றும் செலினேட்டு அயனிக்கும் SeO2−4 ஒப்பானது ஆகும். பல சல்பேட்டுகள் மற்றும் செலினேட்டுகள் சமவடிவ உப்புகளை உருவாக்குகின்றன ref>எஃப். ஆல்பர்ட் காட்டன்; சாப்ரி வில்கின்சன்; கார்லோசு முரில்லோ; மேன்பிரட் பாக்மன் (1999), Advanced Inorganic Chemistry (6வது ed.), நியூ யார்க்கு: வைலி-இன்டசயின்சு, p. 531, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-19957-5</ref>. நான்முகி மெட்டாதெல்லூரேட்டு அயனி டெட்ராயெத்திலமோனியம் உப்பு NEt4TeO4 போன்ற சில சேர்மங்களில் மட்டுமே காணப்படுகிறது [5]. ஒரு மெட்டாதெலூரேட்டு அயனியின் இருப்பைக் குறிக்கும் விகிதவியல் அளவுடன் கூடிய பல சேர்மங்கள் உண்மையில் 6-ஒருங்கிணைப்பு தெல்லூரியம் (VI) பல்லுருவ எதிர்மின் அயனிகளைக் கொண்டிருக்கின்றன, எடுத்துக்காட்டாக சோடியம் தெல்லூரேட்டு Na2TeO4. இதில் எண்முக தெல்லூரியம் மையங்கள் விளிம்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன[6]

TeO2−
4
TeO2−
3
+ 12 O2      (E0 = −1.042 V)

திட்ட ஒடுக்க மின்னழுத்தம் அல்லது E0 மதிப்பு இங்கு குறிப்பிடத்தக்கதாகும், ஏனெனில் இது ஆக்சிசனேற்ற முகவராக தெல்லூரேட்டு அயனியின் வலிமையைக் குறிக்கிறது.

ஆர்த்தோதெலூரேட்டுகள்

தொகு

எண்முக TeO6−
6
எதிர்மின் அயனிகள் கொண்ட சேர்மங்கள் அறியப்படுகின்றன, அவற்றில் Ag6TeO6, Na6TeO6மற்றும் Hg3TeO6 ஆகியவை அடங்கும் [7]. (NH4)2TeO2(OH)4 போன்ற புரோட்டானேற்ற ஐதராக்சியாக்சோதெலூரேட்டுகள் TeO6−
6
என்ற எதிர்மின் அயனியைக் கொண்டுள்ளன. சிலசமயங்களில் NH4TeO4•2H2O) என்றும் எழுதப்படும் இதில் TeO
2
(OH)2−
4
எண்முக அயனிகள் அடங்கியுள்ளன.

TeO4−
5
அயனி

தொகு

Cs2K2TeO5 என்ற சேர்மம் TeO4−
5
என்ற அயனிகயைக் கொண்டுள்ளது. இவை முக்கோண இரட்டைப்பட்டைக்கூம்பு வடிவத்திலுள்ளன [2]. Rb6Te2O9 சேர்மத்தில் TeO4−
5
மற்றும் TeO2−
4
என்ற அயனிகள் உள்ளன [8]. TeO4−
5
அயனியின் இருப்பைக் குறிக்கும் மற்ற விகிதவியல் அளவு சேர்மங்கள் Te
2
O8−
10
என்ற ஈருருவ அயனிகளைக் கொண்டிருக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது. Li4TeO5, Ag4TeO5 சேர்மங்களைப் போல {TeO6} உடன் இவை விளிம்புகளை பகிர்ந்துகொண்டு உருவாகின்றன [9]. அல்லது Hg2TeO5.[4] சேர்மத்தில் உள்ளது போல இவை மூலைகளை பகிர்ந்து கொண்டு உருவாகின்றன.

பல்லுரு தெலூரேட்டு அயனி

தொகு

Li4TeO5.[3] சேர்மத்தில் இரண்டு விளிம்பு பகிர்வு TeO6} எண்முகங்கள் உருவாக்கிய இரும அயனி Te
2
O8−
10
உள்ளது. இதேபோன்ற ஐதராக்சி -ஆக்சி எதிர்மின் அயனியான Te2O6(OH)4 அயனி சோடியம் பொட்டாசியம் டைதெலூரேட்டு(VI) எக்சா ஐதரேட்டில் (Na0.5K3.5Te2O6(OH)4•6H2O) காணப்படுகிறது. இதில் விளிம்பு பகிர்வு எண்முக இணைகள் உள்ளன[10]. மூலையில் பகிரப்பட்ட {TeO 6 } எண்முகங்கள் கொண்ட பல்லுரு சங்கிலி எதிர்மின் அயனிகள் Li4TeO5. சேர்மத்தில் காணப்படுகின்றன.

நீரிய வேதியியல்

தொகு

நீரிய கரைசலில் தெல்லூரேட்டு அயனிகள் 6 ஒருங்கிணைப்புகள் கொண்டுள்ளன. நடுநிலை நிலைமைகளில் பென்டாஐதரசன் ஆர்த்தோதெலூரேட்டு அயனி H
5
TeO
6
பொதுவானதாகும். கார நிலைகளில் H
4
TeO2−
6
டெட்ரா ஐதரசன் ஆர்த்தோதெலூரேட்டு அயனி பொதுவானதாகும். அமில நிலைகளில் Te(OH)6 அல்லது H6TeO6 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஆர்த்தோதெலூரிக் அமிலம் உருவாகிறது [11].

கந்தகம், செலீனியம் ஆக்சியெதிர்மின் அயனிகளின் கட்டமைப்பு ஒப்பீடு

தொகு

நான்முக சல்பேட்டு அயனிகளுடன் SO2−
4
கூடுதலாக கந்தகம்(VI) ஆக்சியெதிர்மின் அயனிகள் 4 என்ற ஒருங்கிணைவு எண் மதிப்பைக் கொண்டுள்ளன. பைரோசல்பேட்டு S
2
O2−
7
, tடிரைசல்பேட்டு S
3
O2−
10
மற்றும் பெண்டாசல்பேட்டு S
5
O2−
16
அயனிகள் அனைத்தும் மூலைப்பகிர்வு {SO4} நான்முகிகளால் உருவாக்கப்பட்டுள்ளன.[12] செலீனேட்டு சேர்மங்களில் நான்கு ஒருங்கிணைவு செலீனிய அயனிக்கு பல உதாரணங்கள் கிடைக்கின்றன, முதன்மையாக SeO2−
4
என்ற நான்முக அயனி மற்றும் பைரோசெலீனேட்டு Se
2
O2−
7
அயனி போன்றவை உதாரணங்களாகும். பைரோசல்பேட்டு அயனி போன்ற கட்டமைப்பையே இதுவும் பெற்றுள்ளது [13]. கந்தகத்தைப் போல அல்லாமல் செலீனியத்திற்கு 5-ஒருங்கிணைவு செலீனியம் ஆக்சியெதிர்மின் அயனிகளும் SeO4−
5
, ஆறு ஒருங்கிணைவு ஆக்சியெதிர்மின் அயனிகளும் SeO6−
6
உள்ளன[14][15][16].

அணுக்கரு காந்த ஒத்த்திர்வு

தொகு

தெலூரியத்தில் 123Te மற்றும் 125Te. 123Te என்ற இரண்டு அணுக்கரு காந்த ஒத்ததிர்வு அணுக்கருக்கள் செயல்திறனுடன் உள்ளன. இயற்கையில் 0.9% தோற்றமும் அணுக்கரு சுழல் 12 மதிப்பையும் இது கொண்டுள்ளது. இதேபோல் 125Te அணுக்கருவும் இயற்கையில் 7% தோற்றமும் அணுக்கரு சுழல் 12 மதிப்பையும் கொண்டுள்ளது.[17] 125Te அதிக உணர்திறன் கொண்டிருப்பதால் அதிகமாக பயன்படுகிறது.[18] . மெட்டா 1.0 மோலார் தெலூரிக் அமிலத்திலுள்ள தெலூரேட்டு எதிர்மின் அயனியை 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் 94.735 மெகாயெர்ட்சு அலைவரிசையில் 125Te அணுக்கரு காந்த ஒத்ததிர்வை பயன்படுத்தி பகுப்பாய்வு மேற்கொண்டதில் அது மில்லியனுக்கு 610 பகுதிகள் ஒத்ததிர்வு அலைவரிசை மதிப்பை பெற்றுள்ளது என அறியப்படுகிறது [5] .

பெயரிடலில் தெலூரேட்டு பின்னொட்டு

தொகு

ஐயுபிஏசி சிவப்பு புத்தகம் (2005) [1] இன் வழிகாட்டுதல் படி சில எடுத்துக்காட்டுகள்:

  • மெட்ட்டாதெலூரேட்டு அயனி, TeO2−
    4
    எனப்படுவது டெட்ராக்சிட்டோதெலூரேட்டு(2–)
  • ஆர்த்தோதெலூரேட்டு அயனி, TeO6−
    6
    எனப்படுவது எக்சாக்சிதெலூரேட்டு(6–)
  • TeF2−
    8
    அயனி என்பது ஆக்டாபுளோரிடோதெலூரேட்டு(2–).

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Nomenclature of Inorganic Chemistry IUPAC Recommendations 2005 – Full text (PDF)
  2. 2.0 2.1 Untenecker, H.; Hoppe, R. (1986). "Die koordinationszahl 5 bei telluraten: Cs2K2[TeO5]". Journal of the Less Common Metals 124 (1-2): 29–40. doi:10.1016/0022-5088(86)90474-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. 
  3. 3.0 3.1 Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
  4. 4.0 4.1 Weil, Matthias (2003). "Preparation, Thermal Behaviour and Crystal Structure of the Basic Mercury(II) Tetraoxotellurate(VI), Hg2TeO5, and Redetermination of the Crystal Structure of Mercury(II) Orthotellurate(VI), Hg3TeO6". Zeitschrift für anorganische und allgemeine Chemie 629 (4): 653–657. doi:10.1002/zaac.200390111. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
  5. 5.0 5.1 Konaka, Saki; Ozawa, Yoshiki; Yagasaki, Atsushi (2008). "Tetrahedral Tellurate". Inorganic Chemistry 47 (4): 1244–1245. doi:10.1021/ic701578p. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. 
  6. Kratochvíl, B.; Jenšovský, L. (1977). "The crystal structure of sodium metatellurate". Acta Crystallographica Section B 33 (8): 2596–2598. doi:10.1107/S0567740877008978. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. 
  7. Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 593, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  8. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. p. 782. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  9. Weil, Matthias (2007). "New Silver Tellurates – The Crystal Structures of a Third Modification of Ag2Te2O6 and of Ag4TeO5". Zeitschrift für anorganische und allgemeine Chemie 633 (8): 1217–1222. doi:10.1002/zaac.200700106. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
  10. Kratochvíl, B.; Podlahová, J.; Jenšovský, L. (1978). "Sodium potassium ditellurate(VI) hexahydrate". Acta Crystallographica Section B 34 (1): 256–258. doi:10.1107/S056774087800271X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. 
  11. Frost, Ray L. (2009). "Tlapallite H6(Ca,Pb)2(Cu,Zn)3SO4(TeO3)4TeO6, a multi-anion mineral: A Raman spectroscopic study". Spectrochimica Acta Part A: Molecular and Biomolecular Spectroscopy 72 (4): 903–906. doi:10.1016/j.saa.2008.12.008. பன்னாட்டுத் தர தொடர் எண்:1386-1425. Bibcode: 2009AcSpA..72..903F. 
  12. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. p. 712. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  13. Paetzold, R.; Amoulong, H.; Růžička, A. (1965). "Untersuchungen an Selen-Sauerstoff-Verbindungen. XXVI. Schwingungsspektrum und Kraftkonstanten des Diselenations". Zeitschrift für anorganische und allgemeine Chemie 336 (5-6): 278–285. doi:10.1002/zaac.19653360508. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
  14. Haas, Helmut; Jansen, Martin (2000). "Octahedral SeO6−
    6
    and Square-Pyramidal SeO4−
    5
    , Two New Oxoselenate Anions". Angewandte Chemie 39 (23): 4362–4364. doi:10.1002/1521-3773(20001201)39:23<4362::AID-ANIE4362>3.0.CO;2-S. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-7851.
     
  15. Orosel, Denis; Dinnebier, Robert; Jansen, Martin (2006). "High-Pressure Synthesis and Structure Determination of K6(SeO4)(SeO5), the First Potassium Orthoselenate(VI)". Inorganic Chemistry 45 (26): 10947–10950. doi:10.1021/ic061548v. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. 
  16. Haas, H.; Jansen, M. (2001). "Na4SeO5, ein neues Pentaoxoselenat(VI) – Synthese, Charakterisierung und Vergleich mit isotypem Na4MoO5". Zeitschrift für anorganische und allgemeine Chemie 627 (4): 755–760. doi:10.1002/1521-3749(200104)627:4<755::AID-ZAAC755>3.0.CO;2-L. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
  17. Housecroft, C. E.; Sharpe, A. G. (2008). Inorganic Chemistry (3rd ed.). Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0131755536.
  18. Drago, R. S. Physical Methods for Chemists 2nd ed.; Surfside Scientific Publishers: Gainesville, FL 1992.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலூரேட்டு&oldid=2868530" இலிருந்து மீள்விக்கப்பட்டது