தெ கலர் ஆப் பாரடைஷ் (திரைப்படம்)
தெ கலர் ஆப் பாரடைஷ் (The Color of Paradise) என்பது 1999 ஆம் ஆண்டு மசித் மசிதி இயக்கத்தில் பாரசீக மொழியில் வெளிவந்த ஈரானிய நாட்டு திரைப்படம் ஆகும். 75வது திரைப்படவிழாவில் சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்திற்காக நுழைந்த முதல் ஈரானிய திரைப்படம் ஆகும்.[1][2][3]
தெ கலர் ஆப் பாரடைஷ் | |
---|---|
இயக்கம் | மசித் மசிதி |
கதை | மசித் மசிதி |
வெளியீடு | பிப்ரவரி 9, 1999 |
ஓட்டம் | 90 நிமிடங்கள் |
நாடு | ஈரான் |
மொழி | பாரசீக மொழி |
கதை
தொகுஇப்படத்தின் கதை கண்பார்வையற்ற முகமது என்ற பையனைப் பற்றியதாகும். டெகரானில் பார்வையற்றவர் பள்ளியில் படிக்கும் முகமதுவை அவரின் அப்பா கோடை விடுமுறை முடிந்தும் கூட கூப்பிட வராமல் தவிர்க்கிறார். ஏனெனில் இவனின் அம்மா இறந்துவிட்டதால் இவனின் அப்பா வேரொரு பெண்ணை மணமுடிக்க நினைக்கிறார். அவருக்கு கண்பார்வையற்ற குழந்தை இருப்பது தெரிந்தால் இவருக்கு பெண்கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். பின்னர் பள்ளியில் தலைமை ஆசிரியரின் கட்டாயத்தால் இவனை அழைத்துச்செல்கிறார். அக்கிராமம் ஒரு அழகிய மலைகள் நிறந்த இடமாக உள்ளது. அங்கு அவன் அனைத்துவிதமான பறவைகளின், மிருகங்களின் ஒலிகளை துள்ளியமாக கேட்டு உணர்கிறான். மேலும் அனைவரும் வியக்கும் வண்ணம் பிரெயில் எழுத்து முறையில் புத்தகங்களைத் தொட்டு உணர்ந்து படிப்பதுக் காட்டுகிறான். படத்தின் கடைசிப்பாகம் காஷ்பியன் கடல் கரையில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. ஆனால் காடைசியில் சோகத்தில் முடிகிறது.
வெளி இணைப்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "'The Color of Paradise': Iran's Way with Nature and a Blind Boy".
- ↑ Riding, Alan (14 October 2003). "The Colors of Paradise as Imagined by Gauguin". The New York Times. https://www.nytimes.com/2003/10/14/arts/the-colors-of-paradise-as-imagined-by-gauguin.html.
- ↑ "The Color of Paradise movie review (2000) | Roger Ebert".