தேகீங் பட்காய் திருவிழா

தேகீங் பட்காய் திருவிழா (Dihing Patkai Festival) என்பது அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள லேகாபானி எனும் இடத்தில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவாகும். கம்பீரமான பட்கை மலைகள் மற்றும் குறும்புத்தனமான டிகிங் நதி ஆகியவற்றின் பெயரால் இவ்விழா அழைக்கப்படுகிறது.[1][2][3] இது அசாம் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு வேடிக்கை மற்றும் விருந்துக்கான எல்லையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது.[1]

தேகீங் பட்காய் திருவிழா
தொடக்கம்16 சனவரி
முடிவு19 சனவரி
காலப்பகுதிஆண்டு
அமைவிடம்(கள்)லேகாபானி,
தின்சுகியா, அசாம்
துவக்கம்டிசம்பர் 2002

இந்த விழா முதன்முதலில் டிசம்பர் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வுகள்

தொகு

திருவிழாவில் பழங்குடி அசாமிய சமூக கண்காட்சிகள், தேயிலை பாரம்பரிய சுற்றுப்பயணங்கள், கோல்ஃப், சாகச விளையாட்டு மற்றும் வனவிலங்கு இன்ப பயணம் ஆகியவை அடங்கும். திருவிழாவின் மற்றொரு ஈர்ப்பு என்னவென்றால், இது 2வது உலகப் போரின் கல்லறைகளுக்கு ஒரு பயணத்தை வழங்குகிறது. ஒரு காலத்தில் மியான்மரின் பொன் நிலத்திற்கு செல்லும் பாதையாக இருந்த ச்டில்வெல் சாலைக்கு ஒரு பயணத்திற்கும் இது ஏற்பாடு செய்கிறது.[1][2][3] பார்வையாளர்கள் யானை சவாரிக்கு செல்லவும், காட்டுப்பகுதிக்குள் செல்லும் பாதையை தேர்வு செய்யவும் முடியும். இந்த நாட்களில் உணவு திருவிழா, கைவினை கண்காட்சி மற்றும் கலாச்சார விழாக்கள் பார்வையாளர்களுக்காக நடத்தப்படுகின்றன. இந்த திருவிழாவில் ஆங்லிங், கயாக்கிங் மற்றும் பாராசெயிலிங் போன்ற பலவிதமான சாகச விளையாட்டுகளை வழங்குகிறது. தேயிலை தோட்டங்கள் மற்றும் டிக்பாய் எண்ணெய் வயல்களுக்கான பயணங்களும் திருவிழாவின் ஒரு பகுதியாகும்.[1][3]

கேலரி

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Dehing Patkai Festival". North East India. Archived from the original on 13 December 2009. பார்க்கப்பட்ட நாள் 12 January 2010.
  2. 2.0 2.1 "Dehing Patkai Festival". Locate India. பார்க்கப்பட்ட நாள் 12 January 2010.
  3. 3.0 3.1 3.2 "Dehing Patkai Festival". Incredible Northeast India. Archived from the original on 18 February 2010. பார்க்கப்பட்ட நாள் 12 January 2010.
தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேகீங்_பட்காய்_திருவிழா&oldid=3681458" இலிருந்து மீள்விக்கப்பட்டது