தின்சுகியா
தின்சுகியா (Pron: ˌtɪnˈsʊkiə) (அசாமிய மொழி: তিনিচুকীয়া) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள தின்சுகியா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இது அசாம் வட்டாரத்தின் வணிக முனையமாக திகழ்கிறது. இது அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தியிலிருந்து 480 கிலோமீட்டர்கள் (298 mi) தொலைவில் வடகிழக்கே அமைந்துள்ளது மேலும் இந்த நகரம் 84 கிலோமீட்டர்கள் (52 mi) தொலைவில் அருணாச்சல பிரதேச மாநில எல்லையிலிருந்து அமைந்துள்ளது.
தின்சுகியா
তিনিচুকীয়া குளங்களின் நகரம் | |
---|---|
city | |
Country | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | தின்சுகியா |
ஏற்றம் | 116 m (381 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 99,448 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமானது | அசாமி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
PIN | 786125 |
Telephone code | 91-374 |
வாகனப் பதிவு | AS -23 |
இணையதளம் | www |
இந்த நகரம் அசாம் மாநிலத்திலுள்ள தின்சுகியா மாவட்டத்தின் தலைமை இடமாகவும் உள்ளது. இது அசாமின் வணிக நகரமாக சொல்லப்படுகின்றது. இங்கு அசாமி மொழியும் இந்தி மொழியும் மக்களால் கலந்து பேசப்படுகின்றது. சமீபகாலமாக இந்த நகரத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களாலும், வணிக கட்டிடங்களாலும் நகரின் தோற்றமமைப்பு மாறி வருகின்றது.
தின்சுகியா அசாமின் தொழில் மற்றும் வணிக மையமாக திகழ்கிறது. இங்கு தேயிலை, ஆரஞ்சு, இஞ்சி, சிட்ரஸ் பழங்கள் மற்றும் நெல் வியாபாரம் பெருமளவில் கையாளப்படுகின்றது. தின்சுகியா அசாமின் தொடருந்து மையமாகவும் திகழ்கின்றது. இந்த நகரத்தில் அசாம் மாநிலத்திலே பெரிய தொடருந்து சந்திப்பு நிலையம் உள்ளது. இந்த நகரம் இந்த பகுதியை நாட்டின் மற்ற பகுதிகளோடு சாலை மற்றும் தொடருந்து வழியே இணைக்கும் சந்திப்பாக உள்ளது.
காட்சியகம்
தொகு-
திலிங்கா மந்திர் -
திப்ரூ ஆறு -
தின்சுகியாவின் ஒரு அமைவிடம்