தின்சுகியா மாவட்டம்
தின்சுகியா மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் தின்சுகியா நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 3790 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1]
Tinsukia District தின்சுகியா மாவட்டம் তিনিচুকীয়া জিলা | |
---|---|
Tinsukia District தின்சுகியாமாவட்டத்தின் இடஅமைவு அசாம் | |
மாநிலம் | அசாம், இந்தியா |
தலைமையகம் | தின்சுகியா |
பரப்பு | 3,790 km2 (1,460 sq mi) |
மக்கட்தொகை | 1,316,948 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 347/km2 (900/sq mi) |
படிப்பறிவு | 70.92% |
பாலின விகிதம் | 948 பெண்கள் / 1000 ஆண்கள் |
வட்டங்கள் | 1. தின்சுகியா, 2. சதியா, 3. மார்கேரிடா, 4. டுமடுமா |
மக்களவைத்தொகுதிகள் | 1.திப்ருகார் (திப்ருகார் மாவட்டத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது), 2.லக்கிம்பூர் (லக்கிம்பூர், தேமாஜி மாவட்டங்களுட பகிர்ந்துகொண்டுள்ளது) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 1. தின்சுகியா, 2. டிக்போய், 3. டுமடுமா, 4. மார்கேரிடா, 5. சதியா |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH 37, NH 38, NH 153 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பொருளாதாரம்
தொகுஇங்கு தேயிலை, ஆரஞ்சு, இஞ்சி ஆகியவற்றையும் பயிரிடுகின்றனர். இங்கு ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் கிளை அமைந்துள்ளது. டிக்பாய் நகரியத்தில் இந்திய ஆயில் கார்பரேசனுக்கு சொந்தமான கச்சா எண்ணெய்க் கிணறுகளும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளது.
போக்குவரத்து
தொகுஇந்த மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஓடுகின்றன. 40 கிலோமீட்டர் தொலைவில் திப்ருகார் விமான நிலையம் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 1,316,948 மக்கள் வாழ்ந்தனர். [2] சதுர கிலோமீட்டருக்குள் 347 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 948 பெண்கள் வாழ்கின்றனர். [2] இங்கு வாழ்வோரில் 70.92% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2] இங்கு அதிகளவில் இந்துக்கள் வாழ்கின்றனர். பலர் பழங்குடியின மக்கள் ஆவர். மக்கள் நேபாளி, பீகாரி, வங்காள மொழி ஆகியவற்றை பேசுகின்றனர்.
சான்றுகள்
தொகு- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). புது தில்லி, இந்தியா: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "மாவட்டக் கணக்கெடுப்பு - 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்
தொகு