தேசியச் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்பு) சட்டம் 1950
தேசியச் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்பு) சட்டம் 1950 (Emblems and Names (Prevention of improper use) Act 1950)[1] இந்தியாவின் தேசியச் சின்னங்களான இந்திய தேசியக் கொடி, இந்திய தேசிய கீதம், அசோகச் சக்கரம், இந்தியா போன்றவைகளை தொழில் மற்றும் வணிக நோக்கங்களுக்காக முறையற்ற முறையில் பயன்படுத்துவதை தடுக்கும் சட்டமாகும். சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்பு) சட்டம் 1950 இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கு தேசிய சின்னங்களை பயன்படுத்துவதை தடை செய்கிறது.[2]
தேசியச் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்பு) சட்டம் 1950 | |
---|---|
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
பின்னணி
தொகுஇந்திய தேசியக் கொடி மற்றும் சின்னம் மற்றும் மகாத்மா காந்தி மற்றும் பிற தேசியத் தலைவர்களின் பெயர்கள் அல்லது உருவப் படங்கள் ஆகியவை தொழில் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காகவும், அவர்களை புண்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படுவது குறித்து இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்பு) சட்டம், 1950 நடைமுறைக்கு வரும் கீழ்கண்ட சட்டங்கள் மட்டும் நடைமுறையில் இருந்தது. அவைகள் பின்வருமாறு:
- வர்த்தக முத்திரைகள் சட்டம், 1940
- காப்புரிமைகள் மற்றும் வடிவமைப்புகள் சட்டம், 1911
- வணிக முத்திரைகள் சட்டம், 1889
- நிறுவனங்கள் சட்டம், 1913
தேசியச் சின்னங்கள் மற்றும் பெயர்கள் தொடர்பான முறைகேடுகளைத் தடுக்க மேற்படி சட்டங்கள் போதுமானதாக இல்லை.
பொருந்தக்கூடிய தன்மை
தொகுஇந்த சட்டம் முழு இந்தியாவிற்கும் நீட்டிக்கப்படுகிறது, மேலும் இந்தச் சட்டத்தின் பயன்பாடு இந்தியாவிற்கு வெளியே உள்ள இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும்.