தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம்

சீனாவின் அணுக்கரு பாதுகாப்பு முகமை

தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் ( National Nuclear Safety Administration) [[சீனா|என்பது அணுசக்தி பாதுகாப்பை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட சீனாவில் உள்ள அனைத்து அணுசக்தி உள்கட்டமைப்புகளின் மேற்பார்வைக்கும் பொறுப்பான ஒரு மத்திய அரசு நிறுவனமாகும். இவ்வமைப்பு அணுசக்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்கிறது மற்றும் ஒப்புதல் பொறிமுறையை ஒழுங்குபடுத்துகிறது. [2]

தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம்
National Nuclear Safety Administration
国家核安全局
Guójiā Hé ānquán Jú
ஒழுங்குமுறை முகமை மேலோட்டம்
அமைப்பு1984
வகைஅணுக்கரு பாதுகாப்பு
ஆட்சி எல்லை சீனா
தலைமையகம்பீகிங்
ஒழுங்குமுறை முகமை தலைமை
  • லி காஞ்யி, பணியகத் தலைவர்
மூல நிறுவனம்மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் [1]
மூல ஒழுங்குமுறை முகமைமாநிலக் கவுன்சில்
வலைத்தளம்nnsa.mep.gov.cn (in சீன மொழி)

வரலாறு தொகு

தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் (1984-1989) 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறுவப்பட்டது. இது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் அணுசக்தி பாதுகாப்பை சுயாதீனமாக ஒழுங்குபடுத்திய மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் துணை நிறுவனமாகும்.[1]

1990 ஆம் ஆண்டு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையமாக மாறியது.

1998 ஆம் ஆண்டு தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது.

2008 ஆம் ஆண்டு மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் என்று அழைக்கப்படும் சீன அரசின் முழு அமைச்சகமாக மேம்படுத்தப்பட்டது மற்றும் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் அதன் நிர்வாக வரம்பில் தக்கவைக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு புதிய சட்டங்கள் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் அதிகாரங்களை வலுப்படுத்தியது. இதனால் புதிய நிறுவன வழிமுறைகள், தெளிவான தொழிலாளர் பிரிவு மற்றும் தகவல்கள் மேலும் வெளிப்பட்டன. [3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Archived copy". Archived from the original on 2012-05-02. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Stanway, David (1 September 2017). "China's legislature passes nuclear safety law". Reuters. https://www.reuters.com/article/us-china-nuclearpower/chinas-legislature-passes-nuclear-safety-law-idUSKCN1BC4ER. 

புற இணைப்புகள் தொகு