தேசிய அருங்காட்சியகம், புது தில்லி

தேசிய அருங்காட்சியகம், புது டில்லி இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆகும். இங்கே வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த பொருட்களிலிருந்து தற்காலக் கலைப்பொருட்கள் வரை உள்ளன. இது இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம், ஜன்பாத்தும், மௌலானா ஆசாத் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

தேசிய அருங்காட்சியகம், புது டில்லி
Map
நிறுவப்பட்டது1947
அமைவிடம்புது டில்லி, இந்தியா
வலைத்தளம்புது டில்லி தேசிய அருங்காட்சியகத்தின் இணையத்தளம்

இந்த அருங்காட்சியகத்திடம் இந்தியாவையும், வெளிநாடுகளையும் சேர்ந்த 200,000 க்கு மேற்பட்ட பொருட்கள் உள்ளன. இவை 5,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்தியாவின் பண்பாட்டு மரபினை விளக்குவனவாக உள்ளன. இங்குள்ள சேமிப்புக்களில் தொல்லியல் பொருட்கள், படைக்கலங்கள், அழகூட்டற் கலைப் பொருட்கள், அணிகலன்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள் போன்றவை அடங்குகின்றன.

வரலாறு

தொகு

1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி புது டில்லியில், அப்போதைய ஆட்சியர் நாயகம் (Governor-General) இராசகோபாலாச்சாரி அவர்களால் ஜனாதிபதி மாளிகையில் திறந்து வைக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி தேசிய அருங்காட்சியகத்தின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த பண்டித ஜவகர்லால் நேரு நாட்டினார். கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 1960 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் அருங்காட்சியக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1960 டிசம்பர் 18 ஆம் தேதி இப் புதிய கட்டிடத்தில் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு