தேசிய அறிவியல் நாள் (இந்தியா)

தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய அறிவியல் நாள்
அதிகாரப்பூர்வ பெயர்தேசிய அறிவியல் நாள்
கடைபிடிப்போர்இந்தியா
வகைதேசிய
முக்கியத்துவம்இராமன் விளைவு கண்டுபிடிப்பை நினைவுகூருதல்
நாள்28 பிப்ரவரி
அடுத்த முறைExpression error: Unexpected < operator.
சி. வி. இராமன்

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.[1] 2013-ம் ஆண்டிற்காக, "மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் உணவு பாதுகாப்பும்" (Genetically Modified Crops and Food Security) குறித்த கொள்கையை வலியுறுத்தப்படுகிறது.[2]

வரலாறு

தொகு

இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்றைய தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.[3]

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

நோக்கம்

தொகு

எந்த ஒரு நாகரீகத்திற்கும் அடிப்படையான அறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல புதிய அறிவியல் சிந்தனைகளைக் கண்டறிவதும்,. அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உணரச் செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.

கருப்பொருள்

தொகு

தேசிய அறிவியல் தினம் ஓவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

ஆண்டு கருப்பொருள்
1999 மாறும் பூமி
2000 அடிப்படை அறிவியலில் ஆர்வத்தை மீண்டும் உருவாக்குதல்
2001 அறிவியல் கல்விக்கான தகவல் தொழில்நுட்பம்
2002 கழிவிலிருந்து செல்வம்
2003 டி. என். ஏ. 50 ஆண்டுகள் & ஆய்வுக் கூட கருத்தரிப்பு 25 ஆண்டுகள்
2004 சமூகத்தில் அறிவியல் விழிப்புணர்வை ஊக்குவித்தல்
2005 இயற்பியலைக் கொண்டாடுதல்
2006 நமது எதிர்காலத்திற்கான இயற்கையை வளர்ப்பது
2007 ஒரு சொட்டுக்கு அதிக பயிர்
2008 பூமியைப் புரிந்துகொள்வது
2009 அறிவியலின் எல்லைகளை விரிவுபடுத்துதல்
2010 பாலின சமத்துவம், நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
2011 அன்றாட வாழ்க்கையில் வேதியியல்
2012 சுத்தமான ஆற்றல் விருப்பங்கள் மற்றும் அணுசக்தி பாதுகாப்பு
2013 மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு
2014 அறிவியல் மனநிலையை வளர்ப்பது
2015 தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அறிவியல்[4]
2016 தேசத்தின் வளர்ச்சிக்கான அறிவியல்
2017 மாற்றுத்திறனாளிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்[5]
2018 நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
2019 மக்களுக்கான அறிவியல், அறிவியலுக்காக மக்கள்[6]
2020 அறிவியலில் பெண்கள்[7]
2021 அறிவியல் தொழில்நுட்ப தாக்கம்: கல்வித் திறன்கள் மற்றும் வேலை[8]
2022 நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை
2023 உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "National Science Day". Archived from the original on 2013-02-03. பார்க்கப்பட்ட நாள் ஃபிப்ரவரி 14, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Genetically Modified Crops and Food Security" (PDF). Archived from the original (PDF) on 2012-10-21. பார்க்கப்பட்ட நாள் ஃபிப்ரவரி 14, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "National Science Day today". All India Radio இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225144150/http://www.newsonair.com/news.asp?cat=national&id=NN5654. பார்த்த நாள்: 28 February 2012. 
  4. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 27 February 2015. பார்க்கப்பட்ட நாள் 27 February 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. http://www.ugc.ac.in/pdfnews/0938370_UGC-Letter-reg-National-Science-Day1.pdf#%5B%7B%22num%22%3A18%2C%22gen%22%3A0%7D%2C%7B%22name%22%3A%22FitH%22%7D%2C799%5D
  6. http://www.dst.gov.in/news/theme-national-science-day-2019-science-people-and-people-science
  7. "National Science Day 2020: Theme for the year is 'Women in Science' - Times of India".
  8. "National Science Day to be held on February 28". The Hindu. 22 February 2021. https://www.thehindu.com/news/national/telangana/national-science-day-to-be-held-on-february-28/article33904580.ece.