தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், லாகூர்

பாக்கித்தான் நாட்டின் லாகூர் நகரில் அமைந்துள்ளது

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், லாகூர் (National Museum of Science and Technology, Lahore) பாக்கித்தான் லாகூர் நகரில் உள்ளது. அருங்காட்சியகம், 1965 ஆம் ஆண்டு லாகூரில் நிறுவப்பட்டது. ஓர் இலாப நோக்கற்ற, சமூக சேவையில் ஈடுபடும் நிரந்தர நிறுவனமாக செயல்படுகிறது. பொதுமக்கள் பார்வையிட அருங்காட்சியகம் திறந்திருக்கும். மனிதகுலத்தின் உறுதியான மற்றும் அருவமான பாரம்பரியத்தையும் அதன் சுற்றுச்சூழலையும் பொதுமக்களின் கல்வி நோக்கத்திற்காக வெளிப்படுத்துகிறது. [1]

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், லாகூர்

1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் பாக்கித்தானின் ஒரே தேசிய அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இது பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே பயன்பட்டது. பின்னர் 1976 ஆண்டு முதல் பொதுமக்களுக்கும் திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் உணர்வில், இந்த அருங்காட்சியகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமாக அதன் செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தி கொண்டே வருகிறது. கண்காட்சிகள் மற்றும் அதன் காட்சியகங்கள் விரிவாக்கத்தின் நான்கு கட்டங்களைக் கடந்து சென்றுள்ளன. 2011 ஆம் ஆண்டு பாக்கித்தான் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை அடுத்து அருங்காட்சியகம் பஞ்சாப், அறிவியல் மற்றும் கல்வித் துறையுடன் இணைக்கப்பட்ட ஒரு துறையாக மாறியது. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி அருங்காட்சியகத்தை கிட்டத்தட்ட 100,000 பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.[1]

மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வு

தொகு

அறிவியல் விழிப்புணர்வு மாணவர்களிடையே ஆராய்ச்சி, விசாரணை மற்றும் புதிய சிந்தனைகளை உருவாக்க வழிவகுக்கிறது. எப்போதாவது சில ஆரோக்கியமான போட்டிகள் மாணவர்களுக்கு அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் கட்டுரை எழுதுதல், அறிவியல் வினாடி-வினா மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பு போன்ற போட்டிகளும் நடத்தப்படுகின்றன. [2] [3]

அருங்காட்சியக அமைவிடம்

தொகு

இந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் பெருந் தட சாலையில் , லாகூரில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Sara Faruqi (3 October 2012). "Through the Lahore Science Museum". Dawn (newspaper). https://www.dawn.com/news/753904/through-the-lahore-science-museum. பார்த்த நாள்: 2 May 2020. 
  2. Mansoor Malik (25 November 2013). "Modelling students on scientific plane". Dawn (newspaper). https://www.dawn.com/news/1058426. பார்த்த நாள்: 2 May 2020. 
  3. Exhibition (four-day exhibition at the museum) Dawn (newspaper), Published 25 October 2001, Retrieved 2 May 2020

புற இணைப்புகள்

தொகு